ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கமல் படம் என்றாலே ஏதாவது பிரச்னை வந்து கொண்டு தான் இருக்கிறது. அது உத்தம வில்லன் படத்திற்கும் தொடர்கிறது. படம் ரிலீஸாவதற்கு முன்பு படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலில் இந்து கடவுளை அவமதித்து இருப்பதாக ஒருவர் வழக்கு தொடர்ந்தார். ஒருவழியாக அந்த பிரச்னை எல்லாம் தீர்த்து படம் இன்று ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், காலையில் திடீரென விநியோகஸ்தர்களுக்கும், தயாரிப்பாளர் லிங்குசாமி தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட பைனான்ஸ் பிரச்னையால் படம் கடைசி நேரத்தில் ரிலீஸாகவில்லை. தொடர்ந்து நடந்து வந்த பேச்சுவார்த்தையில் இன்று மாலை படம் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கமல் படத்திற்கு என்று தனியாக ஒரு கூட்டம் கூடும். படத்தின் தலைப்பு, கமலின் வித்தியாசமான நடிப்பு, டிரைலர் ஏற்படுத்திய எதிர்பார்ப்பு உள்ளிட்ட பல காரணங்களால் உத்தம வில்லன் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் கடைசி நேரத்தில் படத்தின் ரிலீஸ்க்கு ஏற்பட்ட பிரச்னையால் ரசிகர்கள் கோபம் அடைந்தனர்.
சென்னையில் பல இடங்களில் உத்தம வில்லன் படம் வௌியாக இருந்த தியேட்டர் முன்பு ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பல தியேட்டர்களில் பதட்டமான சூழல் நிலவியது. அநேக தியேட்டர்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.