ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
கமல்ஹாசனின் உத்தம வில்லன் படத்திற்கு தமிழகத்தில் சிக்கல் ஏற்பட்டு, படம் வௌியாவதில் தாமதம் ஏற்பட்டு இருந்தாலும், துபாய் நாட்டில் நேற்று மாலையே ரிலீஸாகிவிட்டது.
உத்தம வில்லன் படத்தின் சிறப்பு காட்சி துபாயின், கோல்டன் தியேட்டரில் நேற்று, ஏப்ரல் 30ம் தேதி, 10.30 மணியளவில் நடந்தது. இதில் நடிகர் கமல்ஹாசன், ஆண்ட்ரியா, பூஜா குமார், இயக்குநர் ரமேஷ் அரவிந்த் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். ரசிகர்களோடு சேர்ந்து கமல் உள்ளிட்ட உத்தம வில்லன் படக்குழுவினர் படத்தை பார்த்தனர்.
கோல்டன் தியேட்டரில் சுமார் 1500 பேர் அமர்ந்து படம் பார்க்க முடியும். ஏற்கனவே கமல் படம் ரிலீஸ் என்பதால் தியேட்டரே களையிட்டிருந்த நிலையில், கமலும் இந்த தியேட்டருக்கு வருகிறார் என்று தெரிந்ததும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் தியேட்டர் முன்பு குவிந்துவிட்டனர். ஒருக்கட்டத்தில் அந்த சாலையே ரசிகர்களின் கூட்டத்தால் ஸ்தம்பித்தது.
கோல்டன் தியேட்டரில் வௌியாகும் கடைசிபடம் உத்தம வில்லன் என்பது குறிப்பிடத்தக்கது.