செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
மலையாள நடிகர் ஜெயராமின் இன்னொரு முகம் செண்டை மேள கலைஞர் என்பது. அவரது குடும்பத்தின் பாரம்பரியம் யானை வளர்ப்பும், செண்டைமேளமும் கலந்தது. கேரளாவில் உள்ள தனது வீட்டில் 3 யானைகளை வளர்த்து வரும் ஜெயராம். முக்கிய கோவில்களின் விழாக்களுக்கு இலவசமாக தானே சென்று செண்டை மேளம் வாசிப்பது வழக்கம்.
இந்த நிலையில் ஜெயராமுக்கு கண்ணூர் சிறையிலிருந்து ஒரு கைதி கடிதம் எழுதியிருந்தார். அதில் "கண்ணூர் சிறையில் இருக்கும் கைதிகள் செண்டை மேளம் கற்க ஆர்வமா இருக்கிறோம். சிலர் கற்றும் வருகிறோம். சொந்தமாக செண்டை மேளம் இல்லாததால் வாடகைக்கு எடுத்து பயற்சி எடுக்கிறோம். இதற்கு சிறை நிர்வாகத்திடம் போதிய பணம் இல்லை. இதனால் எங்கள் பயிற்சி பாதியில் நிற்கிறது. செண்டை மேள கலைஞரான நீங்கள் எங்களுக்கு உதவினால் நாங்களும் செண்டை மேளத்தை கற்போம்" என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
உடனே ஜெயராம் கண்ணூர் சிறை நிர்வாகத்திடம் பேசி தனது செலவில் 11 செண்டை மேளங்களை வாங்கி சிறை நிர்வாகத்திடம் ஒப்படைத்தார். இதற்கான எளிய விழா கண்ணூர் சிறைச்சாலையில் நடந்தது. 11 செண்டை மேளங்களின் மதிப்பு 5 லட்சத்துக்கும் கூடுதலாம்.