சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
அஞ்சான் படத்துக்கு பிறகு ஹீரோயின் கதைக்கு முக்கியத்துவமுள்ள ஒரு படத்தில் நடிக்கிறார் சமந்தா. படத்தின் பெயர் பத்து எண்றதுக்குள்ள. விக்ரம் நடிக்கும் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் சமந்தார். பெண்களுக்கு சமூகத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்கு பெண்களே தீர்வு சொல்லும் படமாக இந்த படம் இருக்குமாம். திமிரான பாத்திரத்தில் நடிக்கும் சமந்தா கார் சேஷிங் ஒன்றில் நடிப்பதற்காக தனியாக பயிற்சி எடுத்து, கார் பந்தயத்தில் கலந்துக் கொண்டிருக்கிறார். இந்த காட்சி எதிர்பார்த்ததைவிட சிறப்பாக அமைந்து விட்டதால் இயக்குனர் உட்பட யூனிட்டில் உள்ளவர்கள் அனைவரும் சமந்தாவை பாராட்டி தள்ளியிருக்கிறார்கள். இந்த விஷயம் கேள்விப்பட்டு சமந்தாவின் காதலர் என்று கோடம்பாக்கத்தில் கிசு கிசுக்கப்பட்ட சித்தார்த் வாழ்த்துச்சொல்ல போன் போட்டிருக்கிறார். அம்மணி அவர் அழைப்பை ஏற்கமால் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றுவிட்டாராம். இது ஒருபுறமிருக்க சமந்தா வேறு ஒரு வாலிபருடன் சிநேகம் வைத்திருப்பதாகவும் கோலிவுட் பூனைகள் மியாம் இடுகிறது.