விஜய்யின் ‛ஜனநாயகன்' படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய லைட் மேன்! | மாடலிங் துறையில் இறங்கிய ஷிவானி நாராயணன்! | மீண்டும் சினிமா படப்பிடிப்பில் பங்கேற்ற பவன் கல்யாண் | ஹைதராபாத்தில் 'ஏஐ' ஸ்டுடியோ திறந்த 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜு | யோகிபாபு மீது தவறு இல்லை: பல்டி அடித்த இயக்குனர் | வயது 42 ஆனாலும், திரையுலகில் 22 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம்வரும் த்ரிஷா | 25வது நாளில் 'குட் பேட் அக்லி' | தலைவனாக விஜய் சேதுபதி, தலைவியாக நித்யா மேனன்! | தீபாவளிக்கு வெளியாகும் பைசன்! | 'தொடரும்' படம் தமிழ் பதிப்பு ரிலீஸ் தேதி அறிவிப்பு! |
கமல் நடித்த 'விஸ்வரூபம்' படம் வெளியாகி சுமார் 2 வருடங்கள் ஆகின்றன. அந்தப் படத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட கழித்து கமலின் படம் அதாவது 'உத்தம வில்லன்' ரிலீஸாகவிருக்கிறது . இதனால் உத்தமவில்லன் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. மே 1ஆம் தேதி வெளியாகவிருக்கும் 'உத்தம வில்லன்' படத்திற்கான முன்பதிவு இன்று தொடங்கியது. முன்பதிவு தொடங்கப்பட்ட ஒரு சில மணி நேரங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் பரபரப்பாக விற்றுத் தீர்ந்துவிட்டதாலம். பல திரையரங்குகளில் ஆன்லைன் வழி முன்பதிவிலேயே கணிசமான எண்ணிக்கையில் டிக்கெட்டுகள் விற்றுள்ளன. குறிப்பாக சென்னையில் உள்ள ஐனாக்ஸ், சத்யம், அபிராமி, தேவி, சங்கம், கமலா, ஏஜிஎஸ், உட்லாண்ட்ஸ் போன்ற முக்கிய திரையரங்குகளில் முதல் 4 நாட்களுக்கான டிக்கெட்டுகள் 95 சதவிகிதம் முடிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. மே 1ஆம் தேதி விடுமுறை தினம் என்பதால் பல திரையரங்குகளில் அதிகாலை தொடங்கி காலை நேரத்து சிறப்புக்காட்சிகளுக்கும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த சிறப்புக்காட்சிகளுக்கான டிக்கெட் விலை 500 ரூபாய் வரை விற்கப்படுகிறது.