சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது |
இளம் இசை மேதை யுவன் சங்கர் ராஜாவின் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி வருகிற மே மாதம் 9-ந்தேதி திருநெல்வேலியில் நடைபெறவிருக்கிறது. இசைஞானி இளையராஜாவின் இளைய மகனும் இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா, 1996-ம் வருடம் 'அரவிந்தன்' திரைப்படத்தின் மூலம் தனது திரை இசைப்பயணத்தைத் துவங்கினார். மிகக் குறுகிய காலத்திலேயே தன்னுடைய புதுமையான இசையால் லட்சக்கணக்கான இளம் நெஞ்சங்களை தன்வசப்படுத்தியவர் இதுவரையிலும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து, இளம் இசையமைப்பாளர்களில் தனக்கென தனி இடத்தை தக்க வைத்திருக்கிறார்.
இந்நிலையில், 'யுவன் மியூசிக் எக்ஸ்பிரஸ்' என்ற பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி மூலம் தனது ரசிகர்களை குஷிப்படுத்த தயாராகிவருகிறார். சமூக நலனுக்காக இந்த பிரம்மாண்ட இசைப் பயணத்தில், புதுயுகம் தொலைக்காட்சி மற்றும் GREEN TREES SOLUTIONS அமைப்புடன் கைகோர்த்து வலம்வர இருக்கிறார் யுவன்! வருகிற மே மாதம் 9-ந் தேதி யுவன் முதன்முறையாக திருநெல்வேலி, பெல்பின் மைதானத்தில் நடைபெறவிருக்கும் இம்மாபெரும் இசை நிகழ்ச்சியில், கோலிவுட் மற்றும் பாலிவுட் இசைக் கலைஞர்களும் பங்கேற்க உள்ளனர்.
மண்மணக்கும் நமது இசையை உலகெங்கும் ஒலிக்க செய்த நம் மண்ணின் மைந்தன் 'இசை ஞானி இளையராஜா'வுக்கு மகுடம் சூட்டும் சரித்திர நிகழ்வாகவும் நடைபெறவிருக்கிறது 'யுவன் மியூசிக் எக்ஸ்பிரஸ்' இசை நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.