சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
வட அமெரிக்க வாழ் தெலுங்கு சங்கத்தினரின் மாநாட்டில் கலந்து கொள்ள யுவரத்னா நந்தமூரி பாலகிருஷ்ணா, லாஸ் ஏஞ்செல்சுக்கு செல்ல இருக்கிறார். அந்த சங்கத்தினர் ஆண்டுக்கு இரு முறை நடத்தும் இந்த மாநாடு சிறப்பு வாய்ந்ததாகும். இதில் பல துறையை சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொள்வது வழக்கம். வரும் ஜூலை மாதம் 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை நடைபெறும் இந்த முக்கிய மாநாட்டில் நந்தமூரி பாலகிருஷ்ணா மூன்று நாளும் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார். அமெரிக்காவில் பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள் பெரும் அளவில் உள்ளனர். அவர் அந்த மாநாட்டில் கலந்து கொள்ள இருப்பதை அடுத்து அவருடைய ரசிகர்கள் உற்சாக மிகுதியில் உள்ளனர்.
மேலும் அவர்கள் தங்களுடைய நந்தமூரி ஸ்டாரை வரவேற்க பெரிய அளவில் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். ஆந்திராவில் தெலுங்கு தேசம் ஆட்சிக்கு வந்த பிறகு அந்த கட்சியின் எம்.எல்.ஏ என்ற வகையில் நந்தமூரி பாலகிருஷ்ணா அமெரிக்க செல்வது முதன் முறையாகும். அந்த மாநாட்டில் நந்தமூரி பாலகிருஷ்ணா கலந்து கொள்வது தங்களுக்கு பாக்கியம் என்று அந்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் தங்களது அழைப்பை ஏற்றதற்கு நந்தமூரி பாலகிருஷ்ணாவிற்கு மிக்க நன்றி என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.