ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த பிறந்தநாளை கத்தி படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் விஜய்யுடன் கொண்டாடிய நடிகை சமந்தா இந்த வருடம் தனது பிறந்தநாளை நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் கொண்டாடினார். நேற்று பிறந்த நாள் கொண்டாடிய நடிகை சமந்தாவிற்கு அவரது ரசிகர்களும், நண்பர்களும், திரைப்பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதிலும் குறிப்பாக நடிகை த்ரிஷா, நடிகை சார்மியும் சமூக வலைத்தளம் வழியாக தங்களது பிறந்த நாள் வாழ்த்துக்களை சம்மந்தாவிற்கு தெரிவித்தனர். தமிழில் அறிமுகமான நடிகை சமந்தா, தெலுங்கில் பவன் கல்யான், மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு வெற்றி கண்டார். அதே வேகத்துடன் தமிழ் திரைக்கு வந்தவர் விஜய், விக்ரம், தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு தனது ஆட்டத்தைத் துவங்கி வெற்றி பாதையில் பயணித்து வருகின்றார்.