ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
“தோனி, அழகுராஜா, வெற்றிச் செல்வன்” ஆகிய படங்களில் நாயகியாக நடித்தவர் ஹிந்தி நடிகை ராதிகா ஆப்தே. சமீப காலமாக செய்திகளில் அதிகமாகவே அடிபட்டு வருகிறார். சில வெளிப்படையான கமெண்ட்டுகளால் செய்திகளில் அதிகம் இடம் பெற்றார். திருமணத்திற்கு முந்தைய உறவு பற்றி அவர் பேசிய பேச்சுகள் பரபரப்பாக பேசப்பட்டன. இப்போது வேறு ஒரு விஷயத்திற்காக ராதிகா ஆப்தே மீண்டும் செய்திகளில் இடம் பெற்று வருகிறார். பிரபல ஹிந்தித் திரைப்பட இயக்குனரான அனுராக் காஷ்யப் இயக்கிய 'பார்செட்' என்ற ஆங்கில குறும்படத்தில் சில வினாடிகளே வரும் ஒரு காட்சியில் ராதிகா ஆப்தே 'நியூட்' ஆக நடித்திருக்கிறார். அந்தக் காட்சி தற்போது இணையங்களில் அதிகமாகப் பரவி வருகிறது. இது குறித்து அனுராக் காஷ்யப் மிகவும் வருத்தமடைந்துள்ளார்.
அது பற்றி அவர் கூறியிருப்பதாவது, “சர்வதேச ரசிகர்களுக்காக ஒரு உண்மைக் கதையை அடிப்படையாக வைத்து ஒரு முக்கியமான கருத்துடன் 20 நிமிடம் ஓடக் கூடிய குறும்படம் அது. அந்தப் படத்தில் சில வினாடிகளே வரும் ஒரு காட்சியில் தன்னுடைய ஆடையைத் தூக்கி, ஒரு சிறிய நிர்வாணக் காட்சி ஒன்றில் ராதிகா நடித்திருப்பார். ஒரு நடிகை இம்மாதிரியான காட்சியில் நடிப்பதற்கு மிகவும் தைரியம் வேண்டும். அந்தக் காட்சியை முற்றிலும் பெண்களை வைத்துத்தான் படமாக்கினேன், போஸ்ட் புரொடக்ஷனிலும் பெண்கள் மட்டுமே பங்கு பெற்றனர். அவ்வளவு கவனமாக அந்தக் காட்சியைப் படமாக்கினேன். ஒரு மாதத்திற்கு முன்னதாக அந்தக் குறும்படம் நியூயார்க்குக்கு அனுப்பப்பட்டது. இப்போது அந்த வீடியோ பரவி வருவது அதிர்ச்சியாக உள்ளது,” என அவர் தெரிவித்துள்ளார்.