ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் தனுஷ், புதுமுகம் அமைரா தஸ்தூர், கார்த்திக் மற்றும் பலர் நடிக்க பிப்ரவரி மாதம் 13ம் தேதி வெளியான படம் 'அனேகன்'. மிகுந்த பொருட்செலவில் முன் ஜென்மக் கதை சம்பந்தப்பட்ட படமாக தயாரிக்கப்பட்ட இந்தப் படம் வெளியான நாளிலிருந்தே இத்தனை கோடி வசூல், அத்தனை கோடி வசூல் என பொய்யான செய்திகளை படம் சம்பந்தப்பட்டவர்களே கிளப்பி விட்டனர். ஆனால், படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பும் இல்லை, லாபம் தரக் கூடிய வசூலும் இல்லை என்பதுதான் உண்மை. அதனால்தான், கிடைத்த வரை லாபம் என படத்தை உடனடியாக தொலைக்காட்சியிலும் ஒளிபரப்புவதற்காக நல்ல விலைக்கு விற்றனர். படமும் ஏப்ரல் 14ம் தேதியன்று தனியார் தொலைக்காட்சியில் தமிழ்ப் புத்தாண்டு சிறப்புத் திரைப்படமாக ஒளிபரப்பானது.