ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வானவில், மிடில் கிளாஸ் மாதவன், சமுத்திரம், சமஸ்தானம், விருமாண்டி என பல படங்களில் நடித்தவர் அபிராமி. மலையாளத்தில் முன்னணி நடிகையான இவர், 2009ல் ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலானார். ஆனால், மீண்டும் சினிமா ஆசை அவரை இழுத்து வந்து விட்டது.
அதையடுத்து, தனது நடிப்பு தாகத்தை அபிமான டைரக்டர்களிடம் அவர் வெளிப்படுத்தியதை அடுத்து, மலையாளத்தில் 2 படங்களில நடிக்கும் வாய்ப்பு உடனே கிடைத்து. தொடர்ந்து தமிழுக்கு வந்தவரை ஜோதிகாவின் 36 வயதினிலே படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்க வைத்துள்ளனர். அதுவும் குடும்ப நடிகையான அபிராமியை கவர்ச்சி நடிகையாக களமிறங்கி விட்டுள்ளனர்.
காரணம், அமெரிக்கா சென்ற பிறகு அவரை அந்த நாட்டு கலாச்சாரம் ஒட்டிக்கொண்டு விட்டதாம். அதனால் சாதாரணமாகவே கிளாமர் உடைதரித்து சினிமா வட்டாரங்களில் காட்சி கொடுத்து வந்த அபிராமியிடம், இந்த படத்தில் சற்று கிளாமரான ரோல் என்றதும், இப்போது எனக்கும் அப்படி நடிக்கத்தான் பிடிக்கும் என்று சொல்லி அப்படத்தில் கிளாமர் கலந்த வேடத்தில் நடித்திருக்கும் அபிராமியை தொடர்ந்து கிளாமர் கண்ணோட்டத்தில் சில டைரக்டர்கள் கவனிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.