ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
உன்னைப்போல் ஒருவன், பயணம், வெடி, 6 கேன்டில், என் வழி தனி வழி என பல படங்களில் நடித்தவர் பூனம் கவுர். தற்போது தமிழில் ரணம், வதம், கெஸ்ட், வேட்டை மன்னன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதோடு, தெலுங்கிலும் சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், தனக்கு ஏற்கனவே ஒரு பெண் மேனேஜரை நீண்டகாலமாக வைத்திருந்த பூனம் கவுர், இப்போது அவரை மாற்றி விட்டு இன்னொரு புதிய நபரை நியமித்திருக்கிறார். காரணம், அவரிடமிருந்து அந்த பெண் மேனேஜர் பூனம் கவுரிடம் 10 லட்சத்துக்கும் மேலாக பண மோசடி செய்து விட்டாராம்.
இதை ஆரம்பத்தில் கண்டுகொள்ளாமல் இருந்த பூனம்கவுர், பின்னர் அவர் தன்னை மோசடி செய்கிறார் என்பதை தெரிந்து கொண்டு, உடனடியாக அவரை நீக்கி விட்டாராம். இந்தநிலையில் தற்போது ஒரு புதிய மேனேஜராக நியமித்திருக்கும் பூனம் கவுர், தன்னை இனிமேல் யாரும் ஏமாற்றாமல் இருக்க ரொம்ப உஷாராக செயல்படத் தொடங்கியிருக்கிறார்.