ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் வேலையில்லா பட்டதாரி. அப்படம் தனுசுக்கு மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. அதோடு, அப்படத்துக்கு சில எதிர்ப்புகளும் எழுந்தது. அதில், ஒரு காட்சியில் பொண்ணு பார்க்க பெருசாக இல்லை, சீரியல் நடிகை மாதிரி இருக்கு என்று ஒரு டயலாக் பேசியிருப்பார். ஆனால் அதற்கு அந்த சமயத்தில் சீரியல் நடிகைகள் பெரிய எதிர்ப்பு தெரிவித்தனர். சீரியல் நடிகைகள் என்றால் அவ்வளவு மட்டமா? என்றும் சிலர் எதிர்ப்பு குரல் கொடுத்தனர். அதுமட்டுமின்றி, சீரியல்களை மட்டமாக ஏதாவது படங்களில் பேசினாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
அதனால், இப்போது படக்காட்சிகளில் சீரியல் பார்க்கும் பெண்களை வீட்டில் உள்ள ஆண்கள் திட்டுவது போன்று காட்சிகள் அமைந்தாலும், அதில் திருத்தம் செய்து வருகிறார்கள். குறிப்பாக, சீரியல் என்று சொல்லாமல் டப்பிங் சீரியல்களை பார்த்து ஏம்மா இப்படி கெட்டுப்போய்க்கிட்டிருக்கே என்று சேர்த்து பேசுகிறார்கள்.