சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
மங்கை தொடரை இயக்கிய அரிராஜன் அதன் பிறகு சினிமா இயக்கச் சென்று விட்டார். சில படங்களை இயக்கி விட்டு தற்போது மீண்டும் தொடரை இயக்க வந்துவிட்டார். அவர் இயக்கும் புதிய தொடர் என் தங்கை. இதில் பாண்டியராஜன் கதையின் நாயகனாக நடிக்கிறார்.
ஒக்கேனக்கல் பரிசல் துறையில் பரிசல் காண்டிராக்டராக இருக்கும் பாண்டியராஜன் தன் தங்கைகள் 4 பேருக்கும் அரசு உத்யோகம் பார்க்கும் மாப்பிள்ளையாக பார்த்து திருமணம் செய்து கொடுக்க போராடுகிறார். திருமண வயதை தாண்டிய அண்ணனுக்கு ஒரு நல்ல பெண்ணை பார்த்து கட்டிவைக்க தங்கைகள் போராடுகிறார்கள். இந்த இரண்டுக்கும் இடையிலான உணர்ச்சி போராட்டமாக உருவாகிறது என் தங்கை. பெரும்பாலான படப்பிடிப்புகள் ஒக்கேனக்கலை சுற்றி நடந்து வருகிறது. பாண்டியராஜன் தங்கைகளுக்காக மாப்பிள்ளை தேடி பல ஊர்களுக்கு செல்லும்போது அந்தந்த ஊர்களுக்கு கதை செல்லும் விதமாக திரைக்கதையை அமைத்திருக்கிறார்கள்.
காமெடியும், செண்டிமெண்டும் கலந்த உருவாக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் சனி வரை மாலை 6.30 மணிக்கு ராஜ் டி.வியில் ஒளிபரப்பாகிறது.