ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட் நடிகை தபு திரையுலகிற்கு வந்து கிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இத்தனை வருடங்களில் அவர் மலையாளத்தில் நான்கு படங்களில் மட்டுமே நடித்துள்ளார். பிரியதர்ஷன் இயக்கிய ராக்கிளிப்பாட்டு (தமிழில் சிநேகிதியே), காலாபாணி (தமிழில் சிறைச்சாலை) ஆகிய படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமானார். கடந்த 20௦11ல் மலையாளத்தில் சந்தோஷ் சிவன் இயக்கிய 'உருமி' படத்தில் நடித்தார். அதன்பின் நான்கு வருடங்கள் கழித்து தனது ஐந்தாவது படத்திற்காக மீண்டும் கேரளாவுக்குள் வர இருக்கிறார் தபு. அவர் ஜோடியாக நடிக்கப்போவது மெகாஸ்டார் மம்முட்டியுடன் தான். ஏற்கனவே 'தமிழில் 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடித்தவர்தான் தபு. இந்தப்படத்தை பிரபல கதாசிரியரும் இயக்குனருமான ரெஞ்சி பணிக்கரி மகன் நிதின் தான் இயக்கவுள்ளார். மம்முட்டி இந்தப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.