ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
500 படங்களுக்கு மேல் நடித்துக் கொண்டிருக்கும் குணசித்திர நடிகர் டெல்லி கணேஷ், தன் மகன் மகாதேவனையும் நடிகராக்குகிறார். இயக்குனராகும் ஆசையில் அது தொடர்பாக படித்து வந்த மகாதேவன் தற்போது நடிக்க முடிவு செய்திருக்கிறார். இயக்குனர் ஏ.எல்.விஜய்யிடம் மதராசபட்டினம், வேலாயுதம், சைவம் படங்களில் பணியாற்றிய கிருஷ்ணா இயக்கும் புதிய படத்தில் மகாதேவன் நடிக்கிறார்.
படத்திற்கு என்னுள் ஆயிரம் என்ற பெயர் வைத்திருக்கிறார்கள். மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. நாசரைத் தொடர்ந்து டெல்லி கணேசும் தன் மகனை நடிகராக்குகிறார்.