ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாளத்தில் மட்டுமல்ல, தமிழ் திரையுலகிலும் கூட அறிமுகமான வேகத்திலேயே அதிரடியாக படங்களை கைப்பற்றி நம்பிக்கை நட்சத்திரமாகிவிட்டார் கீர்த்தி சுரேஷ்.. இப்போது முழு நேரமும் இவர் தமிழுக்கு வந்துவிட்டதால், இந்த கேப்பில் காயத்ரி சுரேஷ் என்கிற அறிமுக நடிகை பீல்டில் நுழைந்திருக்கிறார். இவர் மிஸ் கேரளா 2014 பட்டம் வென்றவர்.. இவர் அறிமுகமாவது ஜமுனா பியாரி என்கிற படத்தில் தான்.
'ஜமுனாபாரி' என்கிற இனத்தை சேர்ந்த ஆடு ஒன்று நடிப்பதால் படத்திற்கு இந்தப்பெயரை சூட்டியுள்ளார்களாம். தனது முதல் படத்திலேயே குஞ்சாக்கோ போபனுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் காயத்ரி சுரேஷ். இதுதவிர ஏற்கனவே நமீதா பிரமோத்தும் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார். 2008ல் மம்முட்டியை வைத்து தான் இயக்கிய 'மாயாபஜார்' படம் மூலம் இயக்குனராக அடியெடுத்து வைத்த தாமஸ் செபாஸ்டின் தான் இந்தப்படத்தை இயக்குகிறார்.