ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ரிலீஸாகும் படங்களைப் பற்றி ஃபேஸ்புக், ட்விட்டர் சமூக வலைதளங்களில் அவ்வப்போது கருத்து சொல்வார் இயக்குநர் ஷங்கர். காவியத்தலைவன் படத்துக்குப் பிறகு நீண்டநாட்களாக எந்தப் படத்தைப் பற்றியும் கருத்து வெளியிடாமல் இருந்த இயக்குநர் ஷங்கர் ஃபேஸ்புக்கில் லேட்டஸ்ட்டாக ரிலீஸ் ஆகி உள்ள காஞ்சனா - 2 படம் பற்றிய ஸ்டேட்டஸ் ஒன்றை அப்டேட் செய்திருக்கிறார். ராகவா லாரன்ஸ் இயக்கி, வித்தியாசமான பல வேடங்களில் நடித்துள்ள இப்படத்தை சமீபத்தில்தான் இயக்குநர் ஷங்கர் பார்த்துள்ளார்.
இதுகுறித்து, ''காஞ்சனா -2 படம் பார்த்தேன். கோவை சரளாவின் காமெடி ஃபெர்மான்ஸை மிகவும் ரசித்துப் பார்த்தேன். பல திறமைகளைக் கொண்ட ராகவா லாரன்ஸின் நடிப்பு அபாரம். குறிப்பாக பாடல் ஒன்றில் வரும் சின்னப் பெண் கெட்அப்பில் அசத்தியிருக்கிறார்!'' என ஸ்டேட்டஸ் அப்டேட் செய்துள்ளார் ஷங்கர்.
ஹாலிவுட் படங்களுக்கு இணையாக பிரம்மாண்டமாக படங்கள் எடுத்தாலும் அடிப்படையில் ஷங்கர் மசாலாப்படங்களை விரும்பிப்பார்ப்பவர். அதைவிட காமெடி படங்கள் மிகவும் விரும்பிப்பார்ப்பவர். இதை அவரே பல தடவை சொல்லி இருக்கிறார். எனவே காஞ்சனா-2 படம் ஷங்கருக்குப் பிடித்ததில் ஆச்சர்யமில்லை. ஷங்கரின் டேஸ்ட் அறியாத சிலர் காஞ்சனா-2 படத்தைப் பாராட்டியதால் பேஸ்புக் ட்விட்டரில் ஷங்கரை நக்கல் அடிக்கின்றனர்.