ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
இந்திப் படங்களில் நடித்துக் கொண்டிருந்த நீது சந்திராவை யாவரும் நலம் படத்தின் மூலம் தமிழுக்கு அழைத்து வந்தார் இயக்குனர் விக்ரம் குமார். அந்தப் படத்தில் குடும்ப குத்துவிளக்காகத்தான் நடித்தார். ஆனால் நிஜத்தில் பக்கா கிளாமர் நடிகை அவர். யாவரும் நலம் படத்திற்கு பிறகு பெரிய வாய்ப்புகள் எதுவும் அவருக்கு தமிழில் கிடைக்கவில்லை. இதனால் இந்திப் படத்துக்கே சென்றார்.
சிறிய இடைவெளிக்கு பிறகு விஷால் நடித்த தீராத விளையாட்டு பிள்ளை என்ற படத்தில் 4 ஹீரோயின்களில் ஒருவராக நடித்தார். அதன்பிறகு யுத்தம் செய் படத்தில் அமீருடன் ஒரு பாட்டுக்கு ஆடினார். அப்போது அவருக்கும் அமீருக்கும் ஏற்பட்ட நட்பின் அடிப்படையில் அமீர் அடுத்து இயக்கிய ஆதிபகவன் படத்தில் ஹீரோயினாக நடித்தார். அந்த படமும் தோல்வி அடையவே ரொம்பவே அப்செட் ஆனார். அதன் பிறகு சேட்டை, திலகர் படங்களில் ஒரு பாட்டுக்கு ஆடினார்.
எவ்வளவுதான் திறமை காட்டினாலும் தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க முடியவில்லையே என்ற கருதிய நீது சந்த்ரா இந்தி படத்தில் தான் நடித்த படு கிளாமரான படங்களையும், தனியாக எடுத்த படங்களையும் என்னை பார் என் அழகை பார் என்று சொல்லி பரப்பினார். இதனால் பதறிப்போன அவரது நண்பர்கள் "தமிழில் அதிக வாய்ப்பு வராததற்கு காரணமே நெட்டில் இருக்கும் உன் படங்கள்தான்" என்று அறிவுரைகூற இப்போது அதனை வேக வேககமாக அகற்றிக் கொண்டிருக்கிறார். தற்போது வைகை எக்ஸ்பிரஸ் படத்தில் நடித்து வரும் நீது சந்திரா. தமிழுக்கென்று தனி மானேஜரை நியமித்து வாய்ப்பு தேடி வருகிறார்.