Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மன்மதன் அம்பு படத்தில் ஆபாச பாடல் நீக்கம்

20 டிச, 2010 - 09:21 IST
எழுத்தின் அளவு:

 மன்மதன் அம்பு படத்தில் இடம்பெற்ற ஆபாச பாடல் நீக்கப்படுவதாக கமல்ஹாசன் கூறியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில், டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் - த்ரிஷா ஜோடி நடித்திருக்கும் புதிய படம் மன்மதன் அம்பு. அவ்வை சண்முகி, வசூல்ராஜா எம்பிபிஎஸ், தெனாலி போன்ற படங்களைப் போலவே இந்த படத்திலும் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது என்ற அக்மார்க் உத்தரவாதத்துடன் திரைக்கு வரத் தயாராகியிருக்கும் மன்மதன் அம்பு படத்தில் கமல்ஹாசன் எழுதிய பாடல் ஒன்று சர்ச்சைக்குள் சிக்கியது.

பெண் ஒருத்தி, வரலட்சுமியிடம் வரம் கேட்கும் விதமாக அந்த பாடல் வரிகளை அமைத்துள்ள கமல்ஹாசன், இந்த பாடலின் மூலம் காமம் முடிந்த பிறகு கரெக்டாக கழுவிக்கொள்ள வேண்டும் என்றும் கற்றுக்கொடுக்கிறார். கமல்ஹாசனின் இந்த பாடலுக்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்ததுடன், பாடல் வரிகளை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துள்ளனர். பெரிய நிறுவத்தின் தயாரிப்பு... பெரிய நடிகரின் படம் என்றெல்லாம் பார்க்காமல் கண்டனக் குரல்கள் எழுந்தன. அதேநேரம் படத்தை பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள், மன்மதன் அம்புக்கு யு சான்றிதழ் (சிறுவர்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் பார்ப்பதற்கு ஏற்ற படம்) வழங்கப்பட்டு விட்டது.

இந்நிலையில் கொச்சியில் நடந்த மன்மதன் அம்பு பிரமோஷன் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பேசினார். அப்போது அவர், மன்மதன் அம்பு படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலை நீக்க வேண்டும் என்று சில அமைப்புகள் கூறி வருகின்றன. ஆனால் சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டு விட்ட நிலையில் எந்த காரணத்தைக் கொண்டும் அந்த பாடலை நீக்க முடியாது, என்று ஆணித்தரமாக கூறியிருந்தார். 

இந்நிலையில் படத்திலிருந்து சர்ச்சைக்குரிய பாடலை நீக்குவதாக கமலஹாசன் கூறியுள்ளார்.  இது குறித்து அவர் கூறுகையில், மன்மதன் அம்பு படத்தில் நான் எழுதிய பாடல் இந்து மக்களின் மனதை புண்படுத்துவதாக அறிகிறேன். இப்பாடல் தணிக்கை குழு அனுமதி பெற்று தனியார் டிவியில் 3 முறை ஒளிபரப்பட்டு பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் எனது நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்டிருந்தால் சென்சார் சான்றிதழ் அனுமதி பெற்று பாடல் மக்கள் மனதை புண்படுத்தாத வகையில் அமைந்திருக்கும்.  மன்மதன் அம்பு படம் வேறொரு நிறுவனத்தின் படம். தற்போதைய சூழ்நிலையில்  அரசியலும் மதமும் ஒன்றாக கலந்து விட்டது.  மதமும், அரசியலும் ஒன்றாக கலந்த சூழலில்   மக்களின் ரசனை குறையாதிருக்கவும், அனைவரும் படத்தை பார்க்கவும், சர்ச்சைக்குரிய பாடலை படத்திலிருந்து நீக்குகிறேன். எனது பகுத்தறிவு தேடல் தொடரும் என கூறினார்.

Advertisement
கருத்துகள் (95) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (95)

ரஜினி - chennai,இந்தியா
31 ஜன, 2011 - 20:54 Report Abuse
 ரஜினி யாமறிந்த மனிதர்களில் கடவுள் என்பதை சுத்தமாக புரிந்து கொள்ளட இனம் கமல் இனம் டான்.
Rate this:
aarkay - Saudi Arabia,இந்தியா
26 டிச, 2010 - 19:30 Report Abuse
 aarkay பயந்து போய் பாடலை நீக்கியதனால் தப்பித்து விட்டாய். மீண்டும் இந்த தவறை செய்யாதே.
Rate this:
ம.க - Chennai,இந்தியா
25 டிச, 2010 - 21:16 Report Abuse
 ம.க கமல் இந்து மதத்தை பற்றி விமர்சிப்பது என்பது தன வீட்டு சன்னலை எட்டி பார்ப்பது போன்றது. அண்டை வீட்டு சன்னலை எட்டி பார்க்க சொல்கின்றீர்கள் நீங்கள்...
Rate this:
A.C.SANKARANARAYANAN - Kuwait,இந்தியா
25 டிச, 2010 - 04:59 Report Abuse
 A.C.SANKARANARAYANAN இந்து மக்களை வேதனை படுத்த பிறந்த பிறவி..... இவர். இந்து மதத்தின் அமைதி, மென்மையினை தனக்கு பயன்படுத்திக்கொண்டு. இழிவுபடுத்துகிறார். உமது கடந்த படத்தில் பெருமாளை வீசி, மிதித்து, எறிந்து, புதைத்து ஏளனம் செய்தாய். இப்படத்தில் வரலக்சுமி யை. பஹவான் எங்கும் நிறைந்திருக்கும் இறைவன் உன்னுள்ளும் இருந்து உன்னை கவனித்துக்கொண்டு இருக்கிறான்.... நீர் தப்ப முடியாது.......... A.C.SANKARANARAYANAN திருநெல்வேலி. தருவை. sankar_29kw@yahoo . com
Rate this:
செந்தில் குமார் - coimbatore,இந்தியா
24 டிச, 2010 - 01:05 Report Abuse
 செந்தில் குமார் இது ஹிந்து மக்களுக்கு கிடைத்த வெற்றி. நாம் அனைவரும் ஒன்றுபடுவோம். ஒன்றுபட்டு நமக்கு எதிரான தீமையை எதிர்ப்போம். ஜெய் ஹிந்த்.
Rate this:
மேலும் 90 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in