ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தற்போது தமிழ், தெலுங்கு என இரண்டு சினிமாவிலும் நடித்து வருபவர் ஸ்ரீதிவ்யா. தெலுங்கு நடிகையான இவர் தமிழில் தற்போது ஒரு இடத்தை பிடித்து விட்டார். ஆனால், தெலுங்கில் அவருக்கான இடம் இப்போது இல்லை. ஆனபோதும் தாய்மொழியில் ஒரு நிலையான இடத்தை பிடித்து விட வேண்டும் என்று முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிக்க முயற்சித்து வருகிறார் ஸ்ரீதிவ்யா. இந்த நேரத்தில், தெலுங்கில் பிரமாண்ட டி.வித் தொடர்களை தயாரிக்கும் ஒரு நிறுவனம் சமீபத்தில் ஸ்ரீதிவ்யாவை அணுகி, தங்களது மெகா தொடரில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்து தருமாறு கேட்டுக்கொண்டார்களாம். ஆனால் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் தன்னிடம் அவர்கள் அப்படி கேட்டதால், பதில் சொல்ல முடியாமல் தடுமாறி விட்டாராம் ஸ்ரீதிவ்யா. ஆனால், அந்த டி.வி சீரியல் கம்பெனியில், சினிமாவில் முன்னணி ஹீரோயினி ஆவதற்கு முன்பு 5 ஆண்டுகளாக பல சீரியல்களில் நடித்தவராம் ஸ்ரீதிவ்யா. அந்த நட்பு அடிப்படையில்தான் அவரிடம் கேட்டார்களாம். ஆனபோதும், இப்போது அப்படி நடித்தால் தனது சினிமா மார்க்கெட் பாதிக்கும் என்று மறுத்து விட்ட ஸ்ரீதிவ்யா, இப்போது முடியாது இன்னும் ஒரு 5 வருடங்கள் கழித்து இதற்கான பதிலை சொல்கிறேன் என்று கூறி விட்டாராம்.