மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் |
நடிகர் நடிகைகள் தாங்கள் நடிக்கும் படங்களில் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்ற சட்டதிட்டங்கள் சினிமா வட்டாரங்களில் உள்ளது. ஆனபோதும் அஜித், நயன்தாரா, த்ரிஷா போன்றோர் அதை பின்பற்றுவதில்லை. மற்றபடி அனைத்து நடிகர் நடிகைகளுமே தாங்கள் நடிக்கும் படங்களில் ஆடியோ விழா உள்பட அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்கள். இதில் லட்சுமிமேனனைப் பொறுத்தவரை, தான் நடிக்கும் படங்களின் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர். அதோடு தான் ஒவ்வொரு படங்களிலும் பணியாற்றிய அனுபவத்தை மீடியாக்களிடம் பகிர்ந்து கொண்டும் வருகிறார். ஆனால், கொம்பன் படத்தின் ஆடியோ விழாவில் மட்டும் பரீட்சை காரணமாக அவர் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில், அடுத்தபடியாக சிலரிடம் கதை கேட்டபோதும் அந்த கதைகளில் நடிப்பது குறித்து அவர் இன்னும் பதில் சொல்லவில்லை. இந்த வேளையில், சிலர் அவருக்கு போன் செய்து இப்போது படப்பிடிப்பே இல்லாமல் ஓய்வாகத்தானே இருக்கிறீர்கள். எங்கள் படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்டு எங்களை வாழ்த்த வாருங்கள் என்கிறார்களாம்.