ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜயசேதுபதி நடித்த பீட்சா படத்தை இயக்கியவர் கார்த்திக் சுப்புராஜ். ஒரு பீட்சா கடை, ஒரு வீடு என இரண்டு விதமாக லொகேசன்களில் ஒரு முழு படத்தையும் இயக்கினார். அதோடு, அவர் அமைத்திருந்த விறுவிறுப்பான காட்சி அமைப்புகளும், கதையை சொன்ன விதமும் தமிழ் ரசிகர்களுக்கு புதுமையாக இருந்ததால் அப்படத்துக்கு பெரிய வரவேற்பினை கொடுத்தனர். அதேபோல், தனது இரண்டாவது படமான ஜிகர்தண்டாவையும் ஒரு வித்தியாசமான கோணத்தில் படமாக்கிய கார்த்திக் சுப்புராஜ், தற்போது தனது அடுத்த படமான இறைவி வேலைகளில் இறங்கியிருக்கிறார். இந்த படத்தில் தனது ஜிகர்தண்டாவில் வில்லனாக நடித்த பாபி சிம்ஹாவையே ஹீரோவாக்கியிருக்கிறார் அவர்.
மேலும், தன்னை ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்க்கிறார்கள் என்பதால் முதல் இரண்டு படங்களையும் விட இந்த மூன்றாவது படமான இறைவியை இன்னும் வித்தியாசமான கதைக்களத்தில் இயக்கப்போகிறாராம். அதோடு, அவர் படத்திற்கு முன்பே பாபி சிம்ஹா சில படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்துக்கொண்டிருப்பதால், அவர் கால்சீட் தருவதற்கு காலதாமதம் ஏற்படுகிறது. அதனால் தொடர்ந்து ஸ்கிரிப்ட் வேலைகளில் கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.