ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா 85 விதமான சேலைகள் கட்டுகிறாரே என ஆச்சர்யப்படுவதா, இல்லை.. அட, சேலையெல்லாம் கட்டுகிறாரே என ஆச்சர்யப்படுவதா என்று தெரியவில்லை.. நம்ம ஊரில் கௌதமி 25 வருஷத்துக்கு முன்னரே ஒரே பாடலில் 100 விதமான ஆடைகளை அணிந்து சாதனை படைத்துவிட்டார் என்றாலும் பிரியங்கா சோப்ரா இத்தனை சேலைகள் கட்டுவதும் கூட ஒருவகையில் சாதனையான விஷயம் தான்.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் 'பாஜிராவ் மஸ்தானி' என்கிற படத்தில் டிபிகல் மகாராஷ்டிர பெண்ணாக நடிக்கிறார் பிரியங்கா.. இதற்காக அஜந்தா எல்லோரா குகைகளில் உள்ள சிற்பங்கள் மற்றும் புனேயில் உள்ள சிவாஜி மியூஸியம் ஆகியவற்றை எல்லாம் பார்வையிட்டு, அதில் உள்ள கலைநயத்தை ஆய்வுசெய்து அதற்கேற்றமாதிரி பிரத்யோக நெசவாளர்களை வைத்து இந்த பாரம்பரிய சேலைகளை வடிவமைத்துள்ளார்கள். இதில் 'பாஜிராவ்' ஆக ரன்வீர் சிங் நடிக்கிறார். அவரது முதல் மனைவி 'மஸ்தானி'யாக தீபிகா படுகோனும் இரண்டாவது மனைவி காசி பாய்' ஆக பிரியங்காவும் நடிக்கிறார்கள்.