ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
வெற்றி பெறும் குதிரைகளுக்கு எப்போதுமே மார்க்கெட்டில் மவுசு அதிகம்தான். அந்த வகையில், நேரம், ஜிகர்தண்டா படங்களில் சிறப்பாக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ள பாபி சிம்ஹா, இப்போது பல படங்களில் ஹீரோவாக நடிக்கிறார். ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்தபோதும் ஒன்றன்பின் ஒன்றாக நடிக்க கால்சீட் கொடுத்திருக்கிறார். மேலும், ஏற்கனவே பல படங்களில் கமிட்டாகியிருக்கும் அவருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்ட பிறகு இன்னும் மார்க்கெட்டில் மரியாதை கூடிவிட்டது. அதனால் தற்போது மேலும் சில கம்பெனிகளும் அவரை புக் பண்ணி உள்ளன. அதோடு, அந்த படத்தின் கதைகளை கேட்டபோது சில திருத்தங்களை சொன்ன பாபி சிம்ஹா அவர்கள் அதற்கு உடன்பட்டதால் உடனே டிக் அடித்து விட்டாராம். அந்தவகையில், இந்த ஆண்டு தொடங்கி அடுத்த ஆண்டு இறுதி வரை இப்போது அவரது கால்சீட் டைரி நிரம்பி விட்டதாம். அதேசமயம், இதற்கிடையே ஏதேனும் வித்தியாசமான கதைகள் வந்தால் அந்த கதைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் திட்டமும் வைத்திருக்கிறாராம் பாபி சிம்ஹா.