ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபல காமெடி நடிகரும், ஹீரோவுமான சுனில் வர்மாவும், பிரபல இயக்குனருமான திரிவிக்ரம் ஸ்ரீனிவாசும் புது படத்தில் இணைகிறார்கள். நடிகர் சுனிலை அவ்வளவு எளிதாக மறக்க முடியுமா என்ன? அவர் கடந்த 2006யில் வெளிவந்த அந்தாலா ராமுடு என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். அதன் பிறகு கடந்த 2010யில் பிரபல இயக்குனரான எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் மரியாத ராமண்ணா படத்தில் ஹீரோவாக நடித்து முன்னணி இடத்தை பிடித்தார். அவர் தற்போது பிரபல இயக்குனரான திரிவிக்ரம் ஸ்ரீனிவாசின் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் என்று டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆரம்ப காலகட்டத்தில் சினிமா சான்சுக்காக இருவரும் ஒன்றாகவே அலைந்துள்ளனர். மேலும் இருவரும் ஒரே ரூமில் தங்கி உள்ளனர். இந்நிலையில் தான் இயக்குனர் திரிவிக்ரம் முன்னணி ஹீரோக்களை தவிர்த்து நடிகர் சுனிலை வைத்து ஒரு காமெடி கலந்த பொழுதுபோக்கு படத்தை எடுக்க திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. இது சம்பந்தமாக இருவரும் பேசி உள்ளதாக தெரிகிறது. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.