விஜய்யின் ‛ஜனநாயகன்' படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய லைட் மேன்! | மாடலிங் துறையில் இறங்கிய ஷிவானி நாராயணன்! | மீண்டும் சினிமா படப்பிடிப்பில் பங்கேற்ற பவன் கல்யாண் | ஹைதராபாத்தில் 'ஏஐ' ஸ்டுடியோ திறந்த 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜு | யோகிபாபு மீது தவறு இல்லை: பல்டி அடித்த இயக்குனர் | வயது 42 ஆனாலும், திரையுலகில் 22 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம்வரும் த்ரிஷா | 25வது நாளில் 'குட் பேட் அக்லி' | தலைவனாக விஜய் சேதுபதி, தலைவியாக நித்யா மேனன்! | தீபாவளிக்கு வெளியாகும் பைசன்! | 'தொடரும்' படம் தமிழ் பதிப்பு ரிலீஸ் தேதி அறிவிப்பு! |
கமல்ஹாசன் நடித்த படங்களுக்கு ரிலீஸ் நேரத்தில் தடைகள் ஏற்படுவது புதிதல்ல. அவற்றை எல்லாம் முறியடித்துவிட்டு திட்டமிட்ட தேதியில் கமல் படம் தியேட்டருக்கு வருவதற்குள் கமல் ரசிகர்கள் டென்ஷனில் துடித்துவிடுவார்கள். திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் 'உத்தமவில்லன்' படத்திற்கும் இப்படி எதிர்ப்பு கிளம்பியது. இன்னொரு பக்கம் தியேட்டர் அதிபர்களில் சிலரும் உத்தமவில்லன் படத்தை முடக்க முயற்சி செய்தனர். 'கொம்பன்' படத்திற்கு திரையுலகம் ஒன்றுகூடியதுபோல் 'உத்தமவில்லனு'க்கும் கைகோர்த்து ஆதரவு தெரிவித்ததால் இப்போது அப்படம் ரிலீஸாவதில் எந்த சிக்கலும் இல்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது. கடந்த வாரம் சென்சாருக்கு அனுப்பப்பட்ட உத்தமவில்லன் படத்துக்கு யு சான்றிதழ் கிடைத்தது. இதனால் ஏற்கெனவே திட்டமிட்டபடி படம் வரும் மே 1ஆம் தேதி ரிலீஸாவது உறுதியாகியுள்ளது. 'உத்தம வில்லன்' படத்திற்கு தமிழகத்தின் முக்கிய திரையரங்குகள் பலவற்றையும் 'புக்' செய்துவிட்டார்கள்.
குறிப்பாக சென்னையிலுள்ள முக்கிய திரையரங்குகளான சத்யம் சினிமாஸ், ஐநாக்ஸ், அபிராமி, தேவி, கமலா, ஏவிஎம் ராஜேஸ்வரி, உதயம் காம்ப்ளக்ஸ் உட்பட சுமார் 60 திரைகளில் ரிலீஸாகிறது உத்தம வில்லன். தமிழகத்தில் மட்டும் 400க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.