ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் |
காக்கி சட்டை படத்தைத் தொடர்ந்து அடுத்த அதிரடிக்கு தயாராகிவிட்டார் சிவகார்த்திகேயன். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இயக்குநரான பொன்ராம் இயக்கத்தில் கடந்த சில மாதங்களாக 'ரஜினி முருகன்' படத்தில் நடித்து வந்தார் சிவகார்த்திகேயன். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தைப் போலவே சிவகார்த்திகேயனுக்கு இணையான காமெடி வேடத்தில் இப்படத்தில் நடிக்கிறார் சூரி. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மலையாள நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இப்படத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி, ராஜ்கிரண் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'ரஜினி முருகன்' படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சுமார் 40 கோடிக்கு வாங்கி உள்ளது. கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த ரஜினிமுருகன் படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களாக மதுரையில் நடைபெற்றது. பாடல் காட்சி மற்றும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டதை அடுத்து ரஜினிமுருகன் படப்பிடிப்பு நேற்றோடு நிறைவுபெற்றுள்ளது.
ஏற்கெனவே திட்டமிட்டபடி 'ரஜினி முருகனி'ன் ஃபர்ஸ்ட் லுக்கை ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெறும் விஜய் அவார்ட்ஸ் விழாவில் வெளியிடுகிறார்கள்.
அதோடு டி.இமான் இசையமைப்பில் உருவாகியிருக்கும் பாடல்களை ஜூன் 7ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.
ரஜினி முருகன் படம் ஜூலை 17ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸாகிறது.