ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில், யுடிவி நிறுவனம் தயாரித்துள்ள படம் புறம்போக்கு என்கிற பொதுவுடைமை. ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா ஆகியோர் நடித்திருக்கும் படம் .படத்தை யுடிவி உடன் இணைந்து எஸ்.பி.ஜனநாதனின் பைனரி பிக்சர்ஸ் நிறுவனமும் தயாரித்திருக்கிறது.
புறம்போக்கு படம் இடதுசாரி பார்வை கொண்ட, கருத்துகள் கொண்ட படம் என்பதால் அதை தொழிலாளர் தினமான மே1-ஆம் தேதி வெளியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் எஸ்.பி.ஜனநாதன். பட வெளியீட்டு தேதியை அதிகாரபூர்வமாக அறிவிக்கவும் செய்திருந்தார்கள்! அதே தினத்தில் கமல்ஹாசன் நடித்த உத்தம வில்லன் படமும் ரீலிசாகிறது. உத்தம வில்லன் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்து வருவதால் இப்படம் சுமார் 350 தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது. இதனால் எந்த படத்திற்கும் நாங்கள் போட்டியாக இருக்க விரும்பவில்லை என்று அறிவித்தார் யுடிவி தனஞ்செயன். அதோடு, புறம்போக்கு படத்தின் ரிலீஸ் தேதியை மே 15 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துவிட்டார். புறம்போக்கு மே 15க்கு ரிலீஸ் என்று அறிவித்த சில நிமிடங்களில் மாஸ் படமும் மே 15 அன்று ரிலீஸ் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. புறம்போக்கு, மாஸ் இரண்டுமே பெரிய படங்கள் என்பதால் இரண்டில் ஒரு படம்தான் மே 15 அன்று ரிலீஸ் ஆகும்.