ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் சினிமாவில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் ஒரே நடிகை த்ரிஷா தான். சமீபத்தில் தான் இவருக்கு திருமணம் நிச்சயமானது. இதனால் த்ரிஷாவுக்கு பட வாய்ப்புகள் குறையும் என்று பார்த்தால் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. தற்போது தமிழில் அப்பாடக்கர், தெலுங்கில் இரண்டு படம் என பிஸியாக இருக்கும் த்ரிஷா அடுத்தப்படியாக கமலுடன் இணைந்து நடிக்க இருக்கிறார். ஏற்கனவே கமலின், மன்மதன் அம்பு படத்தில் முதன்முறையாக த்ரிஷா இணைந்து நடித்தார். இப்போது மீண்டும் இணையும் ஒரு வாய்ப்பு அமைந்துள்ளது.
உத்தம வில்லன், விஸ்வரூபம்-2, பாபநாசம்... என வரிசையாக மூன்று படங்களில் நடித்து முடித்து விட்டார் கமல். இதில் உத்தம வில்லன் மே 1ம் தேதி வௌியாக இருக்கிறது. அதன் பின்னர் தொடர்ந்து மற்ற படங்கள் ரிலீஸாக இருக்கின்றன. இந்த படங்களுக்கு பிறகு கமல், அடுத்து ஒரு படத்தில் நடிக்க தயாராகிவிட்டார்.
ஆக்ஷ்ன்-த்ரில்லராக உருவாக இருக்கும் இப்படத்தை கமலின் உதவியாளர் இயக்குகிறார். கமலே தனது சொந்த பேனரில் தயாரிக்கிறார். கிட்டத்தட்ட ஜேம்ஸ்பாண்ட் பாணியில் இப்படத்தின் கதை அமைய இருக்கிறதாம். இதில் ஹீரோயினாக நடிக்க த்ரிஷாவிடம் கேட்டுள்ளனர். த்ரிஷாவும் கதை கேட்டுள்ளார். ஆனால் இன்னும் ஓ.கே. சொல்லவில்லை. படத்தில் த்ரிஷாவுக்கு மிகவும் வித்தியாசமான, ஸ்டைலிஷான வேடமாம், அதனால் கண்டிப்பாக அவர் நடிப்பார் என்கிறார்கள். விரைவில் இப்படம் பற்றிய அறிவிப்புகள் வௌியாகும் என தெரிகிறது.