ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சம்மந்தப்பட்டவர்களிடமிருந்து அதிகாரபூர்வமாக செய்தி வரும்வரை அதிகாரபூர்வமற்ற செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கும். அதுவும் அஜித் போன்ற மாஸ் ஹீரோக்களின் படம் பற்றி எனற்ல் சொல்லவே வேண்டாம். தினம் ஒரு செய்திகள் வெளியாகி திக்குமுக்காட வைக்கின்றன. 'வீரம்' படத்தை தொடர்ந்து இயக்குனர் சிவாவும், அஜித்தும் இணையும் படத்தின் பூஜை சமீபத்தில்தான் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் வீட்டில் அமைடநதுள்ள சாய்பாபா கோவிலில் நடைபெற்றது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார் என்ற தகவல்கள் ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளன.
அண்ணன் தங்கை பாசக்கதையான இப்படத்தில் அஜித்துக்கு தங்கை கேரக்டர் ஒன்று உள்ளது! இந்த கேரக்டரில் பிந்து மாதவி நடிக்கிறார் என்று முதலில் சொல்லப்பட்டது. பிறகு பிந்து மாதவி நடிக்கவில்லை என்ற தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து அந்த கேரக்டருக்கு ஸ்ரீதிவ்யா, நித்யா மேனன் ஆகியோரது பெயர்கள் அடிப்பட்டன.
இந்நிலையில் அஜித்தின் தங்கையாக நடிக்க லட்சுமி மேனனை தொடர்பு கொண்டிருக்கிறார் வீரம் சிவா! படத்தின் கதையும், அதில் தன்னுடைய கேரக்டர் பற்றியும் தெரிந்த பிறகு நடிக்க ஒப்புக்கொள்வதாக கூறி இருக்கிறார் லட்சுமி மேனன். அவர் சொன்ன பதிலை பாஸிட்டிவ்வாக எடுத்துக் கொண்டு கேரளாவுக்கு சென்று அவருக்கு கதை சொல்ல இருக்கிறாராம் இயக்குநர் சிவா.