ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
குப்பி, வனயுத்தம் படங்களை இயக்கிய ஏ.எம்.ஆர்.ரமேஷ் தற்போது தமிழ், கன்னடத்தில் இயக்கும் படம் ஒரு மெல்லிய கோடு. கன்னடத்தில் கேம் என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். இது யாராலும் கண்டுபிடிக்க முடியாத கொடூர கொலைகளை கண்டுபிடிக்கும் தடயவியல் நிபுணரின் கதை. அந்த நிபுணராக அர்ஜூன் நடிக்கிறார். ஷாம் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்தியாவின் ஒரு வி.வி.ஐ.பி கொலை செய்யப்படுகிறார். கொலையாளியை கண்டுபிடிக்கவே முடியவில்லை. கொலைக்கான காரணமும் தெரியவில்லை. அதை அர்ஜுன் கண்டுபிடிப்பது கதை.
கொலையான அந்த வி.வி.ஐ.பி ஒரு கோடீஸ்வர தொழிலதிபர். அந்த கேரக்டரில் மனீஷா கொய்ராலா நடிக்கிறார். படத்தில் அவர் கோடீஸ்வரியாக ஒரு சில காட்சிகளில்தான் வருவார். அதன் பிறகு அவர் பிணமாகத்தான் நடிக்கிறார். அந்த பிணத்தை பல கோணங்களில் ஆராய்ந்து அர்ஜுன் கொலையாளிகளை கண்டுபிடிப்பார்.
பூந்தமல்லி அருகே உள்ள ஒரு தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள தடயவியல் பரிசோதனை லேப் செட்டில் ஒருவாரமாக மனீஷா பிணமாக நடித்துள்ளார். அவர் தொழிலதிபராக உலாவரும் காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட இருக்கிறது.