ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஒரு காலத்தில் விஜய், அஜீத்துக்கு ஜோடியாக நடித்தவர் சங்கவி. விஜய்க்கு ஜோடியாக மட்டும் 4 படங்களில் நடித்தார். 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த சங்கவிக்கு ஒரு கட்டத்தில் மார்க்கெட் இல்லை. 2005ம் ஆண்டு நடித்த ஆணை படம்தான் அவர் கடைசியாக ஹீரோயினாக நடித்தது. அதன் பிறகு சில படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்தார். ஹீரோயினாக நடித்த சில படங்கள் வெளிவரவில்லை. சில காலம் சின்னத்திரையிலும் நடித்தார்.
இந்த நிலையில் சங்கவி மீண்டும் ஹீரோயினாக நடிக்கிறார். மூடர்கூடம் நவீன் தற்போது இயக்கி வரும் படமான கொளஞ்சியில் சமுத்திரகனியின் மனைவியாக நடிக்கிறார். ஒரு குடும்பத்தில் இரண்டு குழந்தைகள், ஒரு குழந்தை மீது தந்தைக்கு அதிக பாசம், இன்னொரு குழந்தையான கொளஞ்சியை ஏனோ அப்பாவுக்கு பிடிக்கவில்லை. இப்படியான ஒரு கதையின் வழியாக குழந்தைகளின் உளவியலைச் சொல்கிற படமாக கொளஞ்சி உருவாகி வருகிறது.
"கொளஞ்சி எனக்கு ரீ என்ட்ரி தரும் படமாக இருக்கும். இனி இதுபோன்ற வலுவான கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்க முடிவு செய்திருக்கிறேன். வில்லியாகவும் நடிக்க தயார். எனது காதல் பற்றியும் கல்யாணம் பற்றியும் நிறைய செய்திகள் வந்து விட்டது. அவை எதுவுமே உண்மையில்லை. விரைவில் திருமணம் நடக்கும். எல்லோருக்கும் சொல்லித்தான் திருமணம் செய்வேன்" என்கிறார் சங்கவி.