ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வாகை சூடவா படத்தில் விமலின் அப்பாவாக நடித்த கே.பாக்யராஜ், அதையடுத்து அப்பாவி, மாவீரன், நினைத்தது யாரோ, ஒருவர் மீது இருவர் சாய்ந்து என பல படங்களில் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக நடித்து வந்தவர், துணை முதல்வர் படத்தில் லீடு ரோலில் நடித்தார்.
இந்த நிலையில், இதுவரை குணசித்ர வேடங்களின் மீது ஆர்வமாக இருந்த அவர் தற்போது காமெடி வேடங்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கிறார். அந்த வகையில், தன்னிடத்தில் உதவியாளராக பணியாற்றிய காவியன் என்பவர் இயக்கும் நாய் படாத பாடு என்ற படத்தில் தற்போது ஒரு கலகலப்பான காமெடி வேடத்தில் நடிக்கிறார் பாக்யராஜ்.
புதுமுகங்கள் ஜோடி சேர்ந்துள்ள இந்த படத்தில் பாக்யராஜ், மட்டுமின்றி, அவரது சிஷ்யரான பாண்டியராஜனும் ஒரு வேடத்தில் நடித்திருக்கிறார். இதே படத்தில் டி.பி.கஜேந்திரனும் இன்னொரு காமெடி வேடத்தில நடித்திருந்தபோதும், பாக்யராஜ்-பாண்டியராஜன் சம்பந்தப்பட்ட காமெடி காட்சிகள் அப்படத்தில் ஹைலைட்டாக அமைந்திருக்கிறதாம். அதோடு, அவர்கள் இரண்டுபேரும் முதன்முறையாக அதிக காம்பினேஷன் காட்சிகளில் இந்த படத்தில்தான் நடிக்கிறார்கள்.