ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஆரம்பத்தில் தனது அண்ணன் வெங்கட்பிரபு இயக்கிய படங்களில் மட்டுமே நடித்து வந்த பிரேம்ஜி, சமீபகாலமாக மற்ற டைரக்டர்களின் படங்களிலும் பரவலாக நடித்து வருகிறார். தற்போது மாஸ், மாங்கா, நாரதர் ஆகிய படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். இதில் மாங்கா படத்தில் அவரே ஹீரோவாக நடித்துள்ளார்.
அதோடு, இந்த படத்தில் இரண்டுவிதமான கெட்டப்புகளில் நடிக்கும் பிரேம்ஜிக்கு இரண்டு அழகான ஜோடிகளும் உள்ளது. மேலும், இந்த படத்துக்கு தானே இசையும் அமைக்கிறார் பிரேம்ஜி. அது மட்டுமின்றி இந்த படத்தில் தன்னுடன் படம் முழுக்க வரும் காமெடியனாக பவர்ஸ்டார் சீனிவாசனை நடிக்க வைத்திருக்கிறார் பிரேம்ஜி.
இதுபற்றி அவர் கூறுகையில், நான் ஹீரோவாக நடிப்பதே சந்தோசமாக உள்ளது. ஆனால் இரண்டு வேடங்களில் நடிப்பது இன்னும் மகிழ்ச்சியான விசயமாக இருக்கிறது. அதோடு இசையமைப்பதில்தான் எனக்கு ஆர்வம் அதிகம். நான் இசையமைக்க வேண்டும் என்றுதான் சினிமாவுக்கே வந்தேன். ஆனால் இப்போது நான் நடிக்கிற இந்த படத்துக்கு இசையமைப்பது பெருமையாக உள்ளது.
அதனால் இந்த படம் மெகா ஹிட்டாக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று கூறும் பிரேம்ஜி, சாதாரணமாக படத்துக்கு ஒரு ஹீரோயின் தான் இருப்பார்கள். ஆனால் இந்த படத்திலோ எனக்கு ஜோடியாக இரண்டு ஹீரோயின்கள் நடித்திருப்பது எனக்கு உற்சாகமாக இருந்தது. அதனால், செம ஜாலியாக இந்த படத்தில் நடித்துள்ளேன் என்கிறார் பிரேம்ஜி.