மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் |
'நான் ஒரு புரட்சிக்காரன்.. பந்த் ஒழிக' என்கிற வாசகங்களை தாங்கிய பிரச்சார அட்டைகளை பைக்கில் மாட்டிக்கொண்டு பந்த் தினத்தன்று ஊருக்குள் வலம் வரும் இளைஞனாக சமீபத்தில் வெளியான 'ஒரு வடக்கன் செல்பி' படத்தில் நடித்திருந்தார் நிவின் பாலி. பின்னர் பந்த் நடத்துபவர்களிடம் செமத்தியாக அடியும் கூட வாங்குவார். ஆனால் நிஜத்தில் கூட 'பந்த்'துக்கு எதிராக குரல் கொடுப்பவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார் நிவின் பாலி.
சமீபத்தில் இயக்குனர் ஜூட் ஆண்டனி “பந்த் நடத்துவது தவிர்க்கப்பட வேண்டும்.. அது பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கிறது” என தனது கருத்தை வெளியிட்டதோடு, பந்த் எதிர்ப்பு இயக்கம் ஒன்றையும் ஆரம்பித்துள்ளார்.. அவருக்குத்தான் இப்போது நிவின் பாலி ஆதரவு தெரிவித்துள்ளார். இவர் முதன்முதலாக இயக்கிய 'ஓம் சாந்தி ஒசானா' படத்தின் ஹீரோ நிவின் பாலி தான்.