பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
வைதேகி காத்திருந்தாள் படத்தில் விஜயகாந்துக்கு ஜோடியாக நடித்த பிரமிளாவின் மகள்தான் நடிகை மேக்னாராஜ். அவரது தந்தை சுந்தர்ராஜனும் பல படங்களில் நடித்தவர்தான். அதனால் பிரபலங்களின் கலைவாரிசு என்று ஏகோபித்த வரவேற்புடன் சினிமா களத்தில் இறங்கியவர் மேக்னாராஜ்.
குறிப்பாக, தமிழில் இவர் காதல் சொல்ல வந்தேன் படத்தில் அறிமுகமானபோது ஜூனியர் நயன்தாரா என்று பெரிய பில்டப் கொடுத்து விளம்பரங்களை முடுக்கி விட்டனர். ஆனால், அந்த படம் தோல்வியடைந்ததோடு, அதன்பிறகு அவர் நடித்த உயர்திரு 420, நந்தா நந்திதா ஆகிய படங்களும் தோல்வியடைந்தன. அதோடு கிருஷ்ணலீலை என்ற படம் கிடப்பில் கிடக்கிறது.ஆனால் மலையாளம், கன்னட சினிமாக்கள் அவருக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகின்றன. அந்த வகையில், அங்கு சிறந்த கமர்சியல் நடிகையாகவும் ஒரு இடத்தை பிடித்துக்கொண்ட மேக்னாராஜை தமிழில் நடிக்க யாராவது இயக்குனர்கள் அழைப்பு விடுத்தால், தமிழே வேண்டாம் ஆளை விடுங்க சாமி என்று கையெடுத்து கும்பிடுகிறாராம்.