Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஸ்வரூபம் வசூலை முறியடிக்குமா உத்தமவில்லன்?

09 ஏப், 2015 - 18:37 IST
எழுத்தின் அளவு:
Is-uthamavillain-will-beat-Vishwaroopam-record

இன்றைய தேதியில் கோலிவுட் தொடங்கி பிற மொழி படத்துறைகளிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் - உத்தமவில்லன்தான். கமல்ஹாசன் நடிப்பில், லிங்குசாமியின் 'திருப்பதி பிரதர்ஸ்' மற்றும் கமல்ஹாசனின் 'ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்' தயாரிப்பில் ரமேஷ் அரவிந்த இயக்கியுள்ள இப்படம் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தியில் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை உலகம் முழுக்க ஈராஸ் நிறுவனம் வெளியிடுகிறது.


'உத்தம வில்லன்' படம் சில தினங்களுக்கு முன் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. 'உத்தம வில்லன்' படத்துக்கு அனைத்து வயதினரும் பார்க்க கூடிய படம் என்பதைக்குறிக்கும் வகையில் 'யு' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, படத்தில் ஆட்சேபத்துக்குரிய காட்சிகளோ... வசனங்களோ இல்லை என்றும் தணிக்கைக்குழுவினர் தெரிவித்தார்களாம். அக்குழுவில் இடம்பெற்ற சிலர், சமீபத்தில் நாங்கள் பார்த்த படங்களிலேயே சிறப்பான படம் உத்தமவில்லன்தான் என்று தயாரிப்பாளர் லிங்குசாமிக்கு தொலைபேசியில் பாராட்டியதாகவும் தகவல்.


இதற்கிடையில் சில அமைப்புகள் உத்தமவில்லன் படத்தை எதிர்த்து தணிக்கை அதிகாரியிடம் மனு கொடுத்துள்ளனர். ஏற்கனவே படத்தைப் பார்த்து பரம திருப்தியைடந்திருந்த தணிக்கைக்குழுவினர் அந்த அமைப்புகளின் கோரிக்கையை நிராகரித்துவிட்டனர். உத்தமவில்லன் படத்தின் தணிக்கை முடிந்த உடன் வெளியீட்டு வேலைகள் சூடுபிடித்துள்ளன.மே-1-ஆம் தேதி உத்தமவில்லன் ரிலீஸ் என்பது உறுதியாகிவிட்டது. கமல் நடிப்பில் கடைசியாக வெளியான படம் விஸ்வரூபம் படத்தின் வசூலையும், சாதனையையும் உத்தமவில்லன் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in