14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
இளையராஜா இசையில் எப்படியாவது ஒரு படம் பண்ண வேண்டும் என்பது இயக்குனர் ஏ.எம்.ஆர் ரமேஷ் கனவு. அது இப்போது நிறைவேறியுள்ளது. இதுபற்றி ரமேஷ்யிடம் கேட்ட போது. குப்பி படத்துக்கு பிறகு வனயுத்தம் படம் செய்யும் போது ராஜா சாரை மனதில் வைத்து அவரிடம் கேட்டேன். வன்முறை அதிகம் உள்ள கதைக்கு என்னால் பண்ண முடியாது அதை தாண்டி ஒரு கதை பண்ணு நான் இசையமைக்கிறேன் என்று இளையராஜா கூறியிருக்கிறார். அதன்படி அதிகம் வன்முறையில்லாமல் காதல் கலந்த த்ரிலர் கதையை தயார் செய்து ராஜாவிடம் காட்டி ஓகே வாங்கி விட்டார் ரமேஷ்.
பின்னணி இசைக்கு அதிகம் ஸ்கோர் உள்ள படம் ஒரு மெல்லிய கோடு, இதற்கு ராஜா சாரை தவிர மற்ற யாரையும் என்னால் யோசிக்க முடியவில்லை. படம் நன்றாக வந்துக் கொண்டிருக்கிறது. என்றார். இந்நிலையில் வனயுத்தம் இவர் இயக்கத்தில் பல சர்ச்சைகளை கடந்து திரைக்கு வந்தாலும் குப்பி படத்தை முழுமையாக இயக்கியது இவருடைய இணை இயக்குனர் சரவணன். அதனால் படம் பேசப்பட்டது. அந்த அனுபவ பின்னணியில் இந்த படத்தை மெனக்கெட்டு செய்து வருகிறார் ரமேஷ். அர்ஜூன் நாயகன் மட்டுமல்ல, சண்டைக் காட்சியையும் இவரே கவனிக்கிறார். தடயவியல் நிபுணராக ஷியாம் நடிக்கிறார். கமர்ஷியல் அம்சங்களுக்காக வடநாட்டு கோதுமைகள் அசாபட், மனிஷ கொய்ராலா நடிக்கிறார்கள். இதில் மனிஷா கொய்ராலாவை ஆக்ஷன் கிங்தான் கம்மீட் செய்து கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.