ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்திற்கு பிறகு பிந்து மாதவியின் மார்க்கெட் சற்று டல்லாகத்தான் இருக்கிறது. அதையடுத்து தேசிங்கு ராஜா, ஒரு கன்னியும் மூணு களவாணிகளும், வருத்தப்படாத வாலிபர் சங்கர், தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் ஆகிய படங்களில் அவர் நடித்திருந்தபோதும் சில படங்களில் கேரக்டர் ரோல்களிலும், இரண்டு ஹீரோயின் ரோல்களிலும் நடித்திருந்தார்.
இருப்பினும், தற்போது நடித்து வரும் கலக்குறே மாப்ளே, சவாலே சமாளி, ஹைகூ ஆகிய படங்களை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் பிந்து மாதவி, தற்போது தலக்கோணம் என்ற படத்தை தயாரித்த எஸ்.ஜே.எஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் கமிட்டாகியிருக்கிறார்.
இதுவரை கலகலப்பான, கிளுகிளுப்பான வேடங்களிலேயே நடித்திருக்கும் பிந்து மாதவி முதன்முதலாக இந்த படத்தில் க்ரைம் கதையில் நடிக்கிறார். மர்மமான முறையில் நடந்த ஒரு கொலையை கண்டு பிடிக்கும் வேடத்தில் நடிக்கும் பிந்துமாதவி, ஆக்சன் கோதாவிலும் குதிக்கிறாராம். அதனால் இந்த படத்துக்காக சண்டை பயிற்சி எடுக்கும் அவர், அதையடுத்து இதுபோன்ற ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் அதிக கவனம் செலுத்தவும் முடிவு செய்திருக்கிறாராம்.