ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சீதா. தற்போது மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் ஆர்.கே. நாயகனாக நடித்து திரைக்கு வந்த என்வழி தனிவழி படத்தில் நாயகனுக்கு அம்மாவாக நடித்திருந்தார். இப்போது ஷாஜி கைலாஷ் இயக்கி வரும் வைகை எக்ஸ்பிரஸ் படத்தில் உங்களுக்கு வாய்ப்பு இல்லையே என்று கேட்டபோது ஒருவர் இயக்கத்தில் நடித்தால் அடுத்து அவர் இயக்கும் படத்தில் நடிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அது மட்டுமல்ல தமிழில் கேரக்டருக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் வரும்போது அதை மிஸ் பண்ண மாட்டேன். பலர் அம்மா கேரகடர் என்று கேட்கிறார்கள். நான் இதற்கு மறுப்பு சொல்வதில்லை. ஒரு கேரக்டருக்காக தன்னை மாற்றி கொள்ளும் வசதி தொழில்நுட்பரீதியில் இப்போது வளர்ந்திருக்கிறது. அதனால் ஆர்.கே. என்ன, ரஜினிக்கு அம்மாவாக நடிக்க சொன்னாலும நடிப்பேன். இப்போது மலையாளம், தெலுங்கில் தலா ஒரு படம் நடித்து வருகிறார்.