ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி பின்னர் வில்லன் ஆனவர் ஆனந்தராஜ். அதன்பிறகு ஏராளமான தென்னிந்திய படங்களில் வில்லனாக நடித்து வந்த அவரது மார்க்கெட் ஒருகட்டத்தில் சரிந்துவிட்டது. அதனால் படவாய்ப்பே இல்லாமல் பல ஆண்டுகளாக இருந்துவந்தார்.
இந்த நிலையில், முண்டாசுப்பட்டி படத்தில் காமெடி கலந்த ஒரு வில்லன் வேடத்தில் நடித்தார். அந்த படம் வெற்றி பெற்றதால் மீண்டும் இயக்குனர்களின் கவனத்துக்கு வந்த அவர், தற்போது விஜயசேதுபதி நடிக்கும் நானும் ரெளடிதான் என்ற படத்தல் வில்லனாக நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படத்தில் அவரது மிரட்டலான நடிப்புக்கு பெரிய அளவில் கைதட்டல் கிடைத்து வருகிறது.