ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அஜித் பிறந்தநாளில் ஏகப்பட்ட படங்கள் ரிலீஸாகும் போல் தெரிகிறது. சூர்யாவின் மாஸ், ஆர்யா-விஜய்சேதுபதியின் புறம்போக்கு போன்ற படங்கள் ரிலீஸாக உள்ள நிலையில், இப்போது வமலின் காவல் படமும் ரிலீஸாக இருக்கிறது. இயக்குனர்கள் சீமான், சமுத்திரகனியிடம் உதவியாளராக இருந்த ஆர்.நாகேந்திரன் இயக்கும் படம் ''காவல்''. முன்னதாக இப்படத்திற்கு நீயெல்லாம் நல்லா வருவடா என்று பெயர் வைத்திருந்தனர். சமீபத்தில் தான் இப்படத்தை டைட்டிலை மாற்றினர்.
இப்படத்தில் விமல், சமுத்திரகனி, அமிர்தா, பார்பி ஹண்டா, புன்னகை பூ கீதா ஆகியோர்கள் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். ஜீ.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் வேலைகள் நடந்து வந்தன.
இந்நிலையில், வருகிற ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று காவல் படத்தின் ஆடியோவையும், அதனைத்தொடர்ந்து படத்தை மே 1ம் தேதி உழைப்பாளர் தினமும், நடிகர் அஜித்தின் பிறந்தநாளிலும் ரிலீஸ் செய்ய உள்ளனர். இத்தகவலை படக்குழு தெரிவித்துள்ளது.