ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பொங்கலுக்கு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய 'டார்லிங்' படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நிக்கி கல்ராணி. அந்தப் படத்தில் பேயாகவும் நடித்து பயமுறுத்தியிருந்தார். படம் வெற்றி பெற்ற பின்னும் அவருக்கு தமிழில் வேறு எந்த புதிய படங்களும் ஒப்பந்தமாகவில்லை. அவர் நாயகியாக நடித்து முடித்த 'யாகாவாராயினும் நா காக்க' படமும் இன்னும் வெளியாகாமலே உள்ளது.
மலையாளம், கன்னடத்தில் சில வெற்றிப் படங்களில் நடித்துள்ளவர் தற்போது தெலுங்குப் பக்கம் போய் அங்கு ஒரு வாய்ப்பைப் பெற்று நாயகியாக அறிமுகமாக உள்ளார். தெலுங்குத் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான சுனில் கதாநாயகனாக நடிக்கும் ஒரு படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். படத்தில் மற்றொரு நாயகியாக 'யாருடா மகேஷ், கல்கண்டு' படங்களின் நாயகி டிம்பிள் சோப்டேவும் நடிக்க உள்ளார்.
தற்போது எந்த மொழியில் ஒரு நடிகை அறிமுகமானாலும் ஒரே மொழியில் மட்டுமே நடிக்க வாய்ப்புக்காக காத்திருப்பதில்லை. ஏதாவது, ஒரு தென்னிந்திய மொழிகளில் நடித்து தங்களை தொடர்ந்து தக்க வைக்க முயற்சித்துக் கொள்கிறார்கள். அதையே நிக்கி கல்ராணியும் செய்திருக்கிறார்.