Advertisement

சிறப்புச்செய்திகள்

காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'கொம்பனு'க்கு ஆதரவாக திரள்கிறது திரையுலகம்!

31 மார், 2015 - 15:22 IST
எழுத்தின் அளவு:
Tamil-film-industry-supports-Komban

ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாகவிருந்த 'கொம்பன்' படத்தை தடைசெய்யக்கோரி, புதிய தமிழகம் கிருஷ்ணசாமி எழுப்பிய சர்ச்சை தற்போது புதிய கட்டத்தை எட்டி இருக்கிறது. உயர்நீதமன்ற மதுரை கிளையில் கிருஷ்ணசாமி சார்பாக மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.


அதனையடுத்து ஓய்வுபெற்ற நீதிபதிகளைக்கொண்ட குழுவினருக்கு 'கொம்பன்' படத்தை திரையிட்டு காண்பித்து அவர்களின் கருத்துக்களை பெற நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி இன்று காலை நீதிபதிகள் அடங்கிய குழுவினருடன் கிருஷ்ணாசாமி தரப்பைச் சேர்ந்த சிலருக்கும் 'கொம்பன்' படத்தை காலை 7 மணிக்கு போட்டுக் காண்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.


திட்டமிட்டபடி நீதிபதிகள் வந்தும்கூட, கிருஷ்ணாசாமியும் அவரது ஆதரவாளர்களும் காலதாமதமாக படம் பார்க்க வந்ததோடு, 'கொம்பன்' படத்தின் முழு ஸ்கிரிப்டையும் தயாரிப்பாளர்களிடம் கேட்டிருக்கிறார்கள். அதற்கு நீதிபதிகள் ஆட்சேபம் தெரிவித்திருக்கின்றனர். பின்னர் ஒருவழியாக படம் ஆரம்பமாகி 10 நிமிடங்களில், படத்தை மறுபடியும் முதலிலிருந்து போட்டுக் காண்பிக்கும்படி கிருஷ்ணாசாமியும் அவரது ஆதரவாளர்களும் பிரச்சனை செய்ய, நீதிபதிகளுக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம்.


ஒரு கட்டத்தில் தியேட்டரை நீதிபதிகள் தியேட்டரைவிட்டே சென்றுவிட்டனர். நடந்த விஷயங்களை சென்னை நீதிமன்றத்தில் அறிக்கையாக சமர்ப்பிக்கப்போவதாகக் கூறி கிளம்பிவிட்டார்களாம். நீதிபதிகள் தரும் அறிக்கை சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து மதுரை கோர்ட்டுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பின்னர் இன்று மாலை 4 மணிக்கு 'கொம்பன்' பட வழக்கில் தீர்ப்பு வெளிவரும் என்று தெரிகிறது.


இதுஒருபுறமிருக்க 'கொம்பன்' படத்தை கண்டிப்பாக ரிலீஸ் செய்ய வேண்டும் என சமூக வலைதளங்களில் ஆதரவுக் குரல்கள் அதிகரித்து வருகின்றன.'கொம்பனு'க்கு ஆதரவாக #SUPPORTKOMBAN என்ற ஹேஷ்டேக் மூலம் ஆதரவை தெரிவித்த வண்ணமுள்ளனர். ரசிகர்களும் இந்த ஹேஷ்டேக் மூலம் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். திரையுலகைச் சேர்ந்த பலரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இப்பிரச்சனையில் நடிகர் சங்கம், இயக்குநர் சங்கம், தயாரிப்பாளர் சங்கமும் தலையிட்டு கொம்பன் படத்துக்கு தன் ஆதரவை தெரிவிக்க உள்ளது. இதுகுறித்து இன்று மாலை சங்க நிர்வாகிகள் பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேச உள்ளனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in