Advertisement

சிறப்புச்செய்திகள்

ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாலியல் குற்றவாளிகளுக்கு மரணத்தை விட கொடிய தண்டனை! - ரு பட டைரக்டர் சதாசிவம் பேச்சு

27 மார், 2015 - 10:43 IST
எழுத்தின் அளவு:
Ru-movie-director-Sadasivam-speech

இர்பான், ரக்ஷிதா, பேரரசு, ஆதவன், மீராகிருஷ்ணன் உள்பட பலர் நடித்துள்ள படம் ரு. இப்படத்தை டைரக்டர் திருமலையிடம் உதவி இயக்குனராக பயிற்சி பெற்ற சதாசிவம இயக்கியுள்ளார். பி.ஆர். ஸ்ரீநார்த் இசையமைத்துள்ள இப்படத்துக்கு எல்.வி.கே. தாஸ் எடிட்டிங் செய்துள்ளார்.


இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று இரவு 7 மணி அளவில் சென்னையில் நடைபெற்றது. விழாவில், வி.ஜி.பி.சந்தோசம், டைரக்டர்கள் பேரரசு, ரவி மரியா, ரமேஷ்கண்ணா மற்றும் தயாரிப்பாளர் தேனப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


அப்போது ரு பட டைரக்டர் சதாசிவம் பேசுகையில், ரு என்றால் தமிழில் ஐந்து என்று பொருள்படும். அந்த வகையில், ஐந்து தவறான பையன்களைப்பற்றிய கதையில் இப்படம் உருவாகியிருக்கிறது. இன்றைக்கு நாட்டில் பரவலாக நடந்து கொண்டிருக்கும் பாலியல் வன்கொடுமையை மையப்படுத்திதான் இப்படம் தயாராகியுள்ளது. இதே போன்ற கதையில் எத்தனையோ படங்கள் வந்து கொண்டிருந்தாலும் இப்படம் ரொம்ப புதுசாக இருக்கும். அதாவது, பாலியல் குற்றம் செய்து விட்டு ஜெயிலில் இருக்கும் ஒருவன், எதற்காக 9 மணிக்கு மேல் ஒரு பெண் வெளியில் வரவேண்டும் என்கிறான்.இன்னொருவன் பாலியல் குற்றங்களுக்கு பெண்கள்தான் காரணம் என்கிறான். அந்த அளவுக்கு தவறையும் செய்து விட்டு திமிராக பேசிக்கொண்டிருக்கிறார்கள்.


இதுபோன்ற கொடியவர்களுக்கு கடுமையான தண்டனை என்ன என்பதை சொல்ல வருவதுதான் இந்த ரு படம். அதாவது பாலியல் குற்றவாளிகளுக்கு மரணத்தை விட ஒரு கொடிய தண்டனையை இந்த படத்தில் கொடுத்திருக்கிறோம். அந்த க்ளைமாக்ஸ் நெஞ்சை பதற வைக்கும் வகையில் இருக்கும். முக்கியமாக அரபு நாடுகளைப்போன்று நம் நாட்டிலும் குற்றங்களுக்கு ஏற்ற தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்பதை எடுத்துக்காட்டும் படமாக இப்படம் இருக்கும். மேலும், இந்த படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகளுக்காக காசி, முதுமலை என வித்தியாசமான லொகேசன்களில் படமாக்கியிருக்கிறோம். அதோடு, க்ளைமாக்ஸ் காட்சிகளுக்காக 15 கிலோ வெயிட் போட்டு நடித்த இர்பான், அந்த லொகேசன்களில் தனக்கு அலர்ஜி ஏற்பட்டதால் அதை தடுக்க வெல்லம் சாப்பிட்டுக்கொண்டே நடித்தார். குறிப்பாக, சண்டை காட்சிகளில் டம்மியாக அடிக்காமல், நிஜமாலுமே அடிவாங்கி அடிகொடுத்து நடித்தார் இர்பான் என்கிறார் டைரக்டர் சதாசிவம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in