ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
சூர்யாவை திருமணம் செய்து கொண்ட ஜோதிகா, திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டார். இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவான ஜோதிகா, பல வருட இடைவேளைக்கு பிறகு '36 வயதினிலே' நடித்து வருகிறார். 'ஹவ் ஓல்ட் ஆர் யூ' மலையாள படத்தின் ரீ-மேக்கான இப்படத்தை சூர்யாவின் சொந்த பட நிறுவனமான '2டி என்டர்டெயின்மென்ட் ' தயாரித்துள்ளது. மலையாளத்தில் 'ஹவ் ஓல்ட் ஆர் யூ' படத்தை இயக்கிய ரோஷன் ஆன்ட்ரூஸே இயக்கியிருக்கும் இப்படத்தில் ஜோதிகாவுடன் ரஹ்மான், அபிராமி முதலானோர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். '36 வயதினிலே' படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் தொடங்கி பிறகு சென்னையில் நடைபெற்று முடிவடைந்தது.
தற்போது விறுவிறுப்பாக போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. தன்னுடைய தயாரிப்பில் முதன் முதலாக வெளிவரும் படம் இது என்பதாலும், நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜோதிகா நடித்துள்ள படம் இது என்பதாலும் போஸ்ட் புரடக்ஷன்ஸ் வேலைகளை சூர்யா மேற்பார்வையிட்டு வருகிறார். அவருடன் அவ்வப்போது ஜோதிகாவும் வந்து போஸ்ட்புரடக்ஷன்ஸ் பணியை கவனிக்கிறார்.
'36 வயதினிலே' படத்தின் ஆடியோ இம்மாதம் 29-ஆம் தேதி வெளியாகவிருந்தது. தற்போது, ஆடியோ வெளியீட்டு விழா ஏப்ரல் 1-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் மீது கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஆடியோ வெளியீட்டை தொடர்ந்து இப்படம் மே மாதம் திரைக்கு வருகிறது.