குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
தமிழக டி.ஜி.பி.,யிடம், நடிகை வனிதா விஜயகுமார் அளித்துள்ள புகாரை அடுத்து, நடிகர் விஜயகுமார், மஞ்சுளா மற்றும் அருண் விஜய் ஆகியோரை கைது செய்ய, மேலிடத்து உத்தரவுக்காக போலீசார் இன்னமும் காத்திருக்கின்றனர். இந்நிலையில், மூவரும் கைதுக்கு பயந்து, தப்பி ஓடி விட்டதாக தெரிகிறது. நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மனைவி மஞ்சுளாவின் மகள் வனிதா விஜயகுமார். இவர், தனது இரண்டாவது கணவர் ஆனந்தராஜனுடன் நுங்கம்பாக்கம் கோத்தாரி நகரில் வசித்து வருகிறார். வனிதாவிற்கு முதல் கணவர் ஆகாஷ் மூலம் விஜய் ஸ்ரீஹரி (9) ஜோவிகா (5) என இரண்டு குழந்தைகளும், ஆனந்தராஜன் மூலம் ஜெயினிதா என்ற ஒன்றரை வயது பெண் குழந்தையும் உள்ளனர்.
கடந்த 5ம்தேதி, தீபாவளியை ஒட்டி, மூன்று குழந்தைகளும், மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம், அஷ்டலட்சுமி கோவில் தெருவில் உள்ள நடிகர் விஜயகுமார் வீட்டில் இருந்தனர். தீபாவளி முடிந்து 7ம்தேதி தன் குழந்தைகளை அழைத்து வருவதற்காக கணவருடன் வனிதா விஜயகுமார் சென்றார். விஜயகுமார், மஞ்சுளா இருவரும், வனிதாவின் மகன் ஸ்ரீஹரியை அனுப்ப மறுத்து, அறையில் அடைத்துள்ளனர். இதனால், வனிதாவிற்கும், விஜயகுமாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்துள்ளது.
அப்போது விஜயகுமார் வீட்டிற்கு வந்த, அவரது மூத்த மனைவி முத்துக் கண்ணுவின் மகனும், நடிகருமான அருண் விஜய், வனிதாவை வயிற்றில் எட்டி உதைத்ததாக வனிதா புகார் கூறினார். அருண் விஜய் மீது மதுரவாயல் போலீசில் வனிதா விஜயகுமார், கணவர் ஆனந்தராஜனுடன் சென்று புகார் அளித்தார். புகாரின் மீது, போலீசார் நடவடிக்கை ஏதும் எடுக்காத நிலையில், கடந்த 15ம்தேதி மருமகன் ஆனந்தராஜன் தன் கையை முறித்துவிட்டதாக மதுரவாயல் போலீசில் விஜயகுமார் புகார் அளித்தார். பெயிலில் வெளிவர முடியாத மூன்று பிரிவுகளின் கீழ் அவசர அவசரமாக வழக்கு பதிந்த போலீசார், கடந்த 23ம் தேதி இரவு ஆனந்தராஜனை கைது செய்தனர்.
தனது கணவர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, நேற்று முன்தினம் டி.ஜி.பி., லத்திகா சரணிடம் வனிதா விஜயகுமார் புகார் மனு அளித்தார். அதன் பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த வனிதா, விஜயகுமார் வீட்டு ரகசியங்கள் ஒவ்வொன்றாக வெளியிடுவேன், தங்கை ஸ்ரீதேவிக்கு மாப்பிள்ளை கிடைக்காமல் விஜயகுமார் குடும்பத்தார் தவித்த கதையை வெளியில் சொன்னால் நாறிப் போய் விடும், என்று கூறினார்.
இந்நிலையில் வனிதா புகார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயகுமார் மற்றும் குடும்பத்தினரை கைது செய்ய தயாராகி வருகிறார்கள். உயர் அதிகாரிகளின் உத்தரவுக்காக போலீசார் காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், நடிகர் விஜயகுமார், இரண்டாவது மனைவி மஞ்சுளா, முதல் மனைவியின் மகன் அருண் விஜய் ஆகியோர் கைதாவதை தவிர்க்க, தப்பி ஓடி விட்டதாக தெரிகிறது. அவர்கள், தங்களுக்கு தெரிந்த வி.ஐ.பி.,க்கள் மூலம் தூது முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.
அதேநேரம், அருண் விஜயை கைது செய்யாத வரை, இப்பிரச்னையை விடப்போவதில்லை என்றும், இதற்கு பின்னணியில் யாரோ இருப்பதாகவும் வனிதா விஜயகுமார் தெரிவித்திருந்தார்.
என்ன செய்யபோகிறார் சூப்பர் நடிகர்? : குடும்பச் சண்டை வீதிக்கு வந்த நிலையில், என்ன செய்வதென்றே தெரியாமல் நடிகர் விஜயகுமார் தரப்பு தற்போது தவித்து வருகிறது. இவர்கள் குடும்பத்துக்கு, "எல்லாமுமாக இருக்கும், "சூப்பர் நடிகரின் இப்பிரச்னை குறித்த நடவடிக்கை பற்றி, சினிமாக்காரர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
வனிதா என் மகள் இல்லை : இந்த விவகாரம் குறித்து நடிகர் விஜயகுமார் அளித்துள்ள பேட்டியொன்றில், வனிதா என் மகள் இல்லை என்று கூறியிருக்கிறார். வனிதா என் மகள் என்று கூட சொல்ல முடியாத அளவுக்கு வேதனையிலும், வெட்கத்திலும் இருக்கிறேன். இதுக்கு மேல் என் குடும்பத்துக்கும், வனிதாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நம்மை போல அவங்களும் பிள்ளைகளை பெற்று வளர்த்து ஆளாக்கும் போதுதான் அந்த வலியை உணர்வாங்க, என்று அவர் கூறியுள்ளார்.
எங்கே தலைமறைவு? : நடிகர் விஜயகுமார் தனது மனைவி மஞ்சுளாவுடன் தற்போது ஐதராபாத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில தினங்களுக்கு டைரக்டர் ஹரியின் உறவினர் திருமணத்தில் கையில் கட்டு போட்டபடி கலந்து கொண்ட விஜயகுமார், தற்போது வனிதா விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதால், போலீஸ் கைது செய்து விடுவார்களோ என பயந்து ஐதராபாத்தில் தலைமறைவாக இருக்கிறார். வனிதா புகாரில் முதல் குற்றவாளியாக இருக்கும் நடிகர் அருண் விஜய் அமெரிக்கா சென்று தலைமறைவாகி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.