பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

அஜீத், அனுஷ்கா, த்ரிஷா நடிப்பில் கவுதம் மேனன் இயக்கிய படமான என்னை அறிந்தால் இன்றுடன் (மார்ச் 26) 50வது நாளை கடக்கிறது. கடந்த பிப்ரவரி 5ந் தேதி வெளியான படம், முதல் 25 நாட்கள் அனைத்து தியேட்டரிலும் ஹவுஸ்புல்லாகவும். அதன் பிறகு ஆவரேஜ் கலெக்ஷனுடம் ஓடியது. தற்போது சத்யம், எஸ்கேப், பிவிஆர், லக்ஸ், மாயாஜால், ஐநாக்ஸ், வளாகங்களில் ஓரிரு காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. வெளியூர்களில் ஓரிரு தியேட்டர்களில் 50 நாளை தொட்டிருக்கிறது.
படத்திற்கு பாசிட்டிவ், நெகட்டிவ் என இரண்டு விதமான விமர்சனங்களும் வந்தது என்றாலும் அஜீத்தின் அமைதியான, வித்தியாசமான நடிப்பு அவரது ரசிகர்களையும் தாண்டி பொதுமக்களுக்கு பிடித்திருந்தது. சத்யசாய் பிலிம்ஸ் சார்பில் ஏ.எம்.ரத்தினம் தயாரித்திருந்தார். தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்களுக்கு லாபத்தை சம்பாதித்துக் கொடுத்தது. அஜீத் நடித்த சத்யதேவ் என்ற போலீஸ் கேக்டர் அவரது கேரியரில் முக்கியமானதாக அமைந்து விட்டது.