52வது பிறந்தநாளில் மனைவி ஷோபாவுக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசளித்த இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகர்! | கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்கும் தெலுங்கு நடிகர் நானி! | 25வது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடிய அஜித்குமார் - ஷாலினி! | பிளாஷ்பேக் : திமுகவுக்காக தலைப்பை மாற்றியதால் தன் பட தலைப்பை கொடுத்த எம்ஜிஆர் | பஹல்காம் தாக்குதலை திசை திருப்பாதீர்கள்: ஆண்ட்ரியா வேண்டுகோள் | திரைப்படக் கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய 'கீனோ' | பிளாஷ்பேக் : தியாகராஜ பாகவதரை காப்பாற்ற முயன்ற திரையுலகம் | முழுக்க முழுக்க 'ஏஐ' மூலம் உருவான இந்தியாவின் முதல் படம்: பட்ஜெட் 10 லட்சம் தானாம்! | பிரியா பிரகாஷ் வாரியரை டென்ஷனாக்கிய விஜய்யின் பாராட்டு வீடியோ | நான் பாகிஸ்தானி அல்ல ; கொதிக்கும் பிரபாஸ் பட நாயகி |
அவ்வை சண்முகி, தெனாலி, பஞ்சதந்திரம், தசாவதாரம் ஆகிய படங்களைத் தொடர்ந்து கமல்ஹாசன் - கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் உருவாகி வரும் புதிய படம்தான் மன்மதன் அம்பு. மிதக்கும் கப்பலில் மனித உறவுகளுக்கு இடையே நடக்கும் உறவுகளை ரொமான்டிக் கலந்த காமெடியில் சொல்லப்போகும் இந்த படத்தை ரெட்ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கிறார். கமலுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கும் இப்படம் பற்றிய ஸ்பெஷல் ஹைலைட்ஸ் வருமாறு:
* பாரீஸ் நகரில் தொடங்கி சூட்டிங் பெரும்பாலும் ஐரோப்பாவின் முக்கிய துறைமுக நகரங்களான பார்சிலோனா, ஜனோவா, அன்னிசி, ஷெத்தோ ரெனாட் உள்ளிட்ட இடங்களிலும், இத்தாலிய பகுதியில் வெனிஸ் மற்றும் ரோமிலும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் சில பகுதிகளிலும் தமிழ்நாட்டில், கொடைக்கானல், சென்னை உள்ளிட்ட இடங்களிலும் படப்பிடிப்பு நடந்தது. படத்தின் இறுதிகட்ட காட்சிகள் சென்னையில் படமாக்கியுள்ளனர்.
* மத்திய தரக்கடலில் மிதக்கும் பிரம்மாண்ட கப்பலில் பெரும்பாலான கதை நிகழ்கிறது. நகைச்சுவை உணர்வுடன், மனித உறவுகளுக்கு இடையேயான உறவுகளை சித்தரிக்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது.
* நாயகன் கமல்ஹாசன் மேஜர் ஆர்.மன்னாரு கேரக்டரில் நடிக்கிறார். நட்புக்கும் - காதலுக்கும் இடையே சிக்கிக் கொண்டு அவர் படும் பாடு கலகலப்பாக இருக்குமாம்.
* கமலுக்கு ஜோடியாக வரும் த்ரிஷா இப்படத்தில் தமது சொந்த குரலில் பேசியுள்ளார். அம்பு ஜாக்ஷி என்ற கேரக்டரில் நடித்திருக்கும் அவர், கவிதை ப்ரியாராக இருப்பதுடன், கவிகளையும் வாசித்திருப்பது ஹைலைட்.
* மாதவன் மதனகோபால் எனும் தொழிலதிபர் கேரக்டரில் நடித்திருக்கிறார். தீபா என்ற கேரக்டரில் சங்கீதா நடித்திருக்கிறார். இவர்கள் தவிர ரமேஷ் அரவிந்த், ஊர்வசி, உஷா உதுப், ஸ்ரீமன், ராம்ஜி உள்ளிட்டோரும் இருக்கிறார்கள்.
* களவாணி ஓவியா கவுரவ தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
* இப்படத்தில் கமல் நாயகனாக நடித்திருப்தோடு மட்டும் அல்லாமல் திரைக்கதை மற்றும் ஐந்து பாடல்களை எழுதியுள்ளார். இப்பாடல்கள் தமிழ் இலக்கியம் முதல் காமெடி வரை பல பாடல்களை உள்ளடக்கியுள்ளது.
* தேவிஸ்ரீ பிரசாத்தின் துள்ளலான இசையில் நெஞ்சை அள்ளும் மெலடி, வசீகரிக்கும் பாட்டு என ஆறுபாடல்கள் இடம்பெற்றுள்ளன.
* பாடல்களுக்கு ஏற்றவாறு மிக நேர்த்தியாக நடனம் அமைத்து இருக்கிறார் ஷோபி.
* சண்டைக்காட்சிகளில் தன் திறமையை வெளிப்படுத்தியுள்ள ரமேஷ், ஹைலைட்டாக பிரான்சின் ஹியூகோ பிரல்லியர், மலேசியாவின் வில்லியம் ஹாங் ஆகியோருடன் சண்டைக்காட்சிகள் அமைத்துள்ளார்.
* இந்த படத்தின்மூலம் கேமராமேனாக அறிமுகமாகும் மனுஷ் நந்தன், அனைத்து காட்சிகளையும் டிஜிட்டல் வடிவில் படமாக்க ரெட் எம்.எக்ஸ் கேமராவை பயன்படுத்தியிருக்கிறார்.